19th
March, 2015
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
(குறள் 1058:
இரவு அதிகாரம்)
இரப்பாரை - யாசிப்பாரே; இது இரப்பாரே என்று இருந்திருக்க
வேண்டும்
இல்லாயின் - இவ்வுலகில் இல்லையெனில்
ஈர்ங் கண் - ஈரமுடைய பெருங்கடலில் இருக்கின்ற (ஈரம்
என்றதால், ஈவாரைக் குறிக்கிறது)
மா ஞாலம் - பெரிய உலகத்தின்கண்
மரப்பாவை - ஒரு மரப்பொம்மை
சென்று வந்தற்று - சென்று வருவதுபோலாம் (வெற்றாக)
இக்குறளில் இரப்பாரை என்பது இரப்பாரே என்றிருந்திருக்க
வேண்டும். ஈரமுடைய கடலில் இருக்கின்ற இப்பெரியவுலகில் உயிரில்லா மரப்பொம்மையானது உலவுவதுபோன்றேயாம்,
ஈர நெஞ்சினை உடைய ஈவார் இருந்தும், இவ்வுலகில் யாசிக்கிறவரே இல்லையென்பதும். ஈரத்தன்மையுள்ள
உலகமே ஒரு வெற்றுப் பாழ் நிலமாக உள்ளது போன்றேயாம்.
ஈதல் செய்வதால் ஏற்படும் புகழும், புண்ணியங்களும் இல்லாமையின்
வானோர் உலகும் ஒருவருக்கு கிடைக்காது. பரிமேலழகரும்
தம்முரையில், ஈவாரும் கொள்வாரும்
இல்லாத வானத்து, வாழ்வாரே வன் கணவர் என்று சொல்கிறார். ஆனால் வானுரையும் தேவர்கள் ஈவதுண்டாயினும், அங்கே
இரப்பார்கள் இல்லையாதலால், வானுலகும் இக்குறளின் கருத்தையொட்டி பாழுலகே என்று கொள்ளலாமோ?
Transliteration:
irappArai illAyin IrngaNmA njAlam
marappAvai senRuvan daRRu
irappArai – When those who seek alms (should have
been irappArE)
illAyin – are in this world
IrngaN – In the vast wet landscape (ocean) - refers to
benovelence
mA njAlam – the big world
marappAvai – a wooden toy
senRu vandaRRu – trying to move around (without any
life, operated by somebody)
The word “irappArai” in this verse should have been
“irappArE”. To not have people that seek alms from others is like a world that
is surrounded by so much of wet sea, (indirectly refers to benovelent people),
yet have only wooden toys operated mechanically, a just a useless landscape.
The fame and
the merits one has to earn to deserve the place among heavens are not possible
without being benovelent.
“Without those that seek alms, the ocean-engulfed
world surrounded
by
so much benovelence is lifeless with only wooden toys operated”
இன்றெனது
குறள்:
பொம்மைதன்
பொய்யியக்கம் போன்றதே யாசிப்பார்
தம்மைக்கொள்
ளாத உலகு
pommaithan poyyiyakkam pOnRadE yAsippAr
thammaikkoL LAda ulagu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam