17th
March, 2015
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
(குறள் 1056:
இரவு அதிகாரம்)
கரப்பு இடும்பை - யாசிக்கவருபவரிடம் தம்மிடம் இருப்பதை ஒளிக்கும் நோய்
இல்லாரைக் காணின் - இல்லாதவரைக் கண்டால்
நிரப்பு இடும்பை எல்லாம்
- வறுமை, இல்லாமை ஆகிய துன்பங்கள் எல்லாமே
ஒருங்கு கெடும் - ஒன்றாய் கெடும்.
யாசிக்க வருவோரிடம் தம்மிடம் இருப்பதை மறைக்கின்ற நோய்
இல்லாதவரைக் கண்டால், யாசிப்பவரின் வறுமை, இல்லாமை ஆகிய துன்பங்கள் எல்லாம் ஒன்றாக
அழிந்துபடும். இருப்பதை மறைப்பதை நோய் என்று கூறி, கொடுக்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள், அந்நோய்க்கு ஆட்பட்டால்,
அவர்கள் அதிலிருந்து விடுபடவேண்டியதையும் உணர்த்துகிறார் வள்ளுவர்.
Transliteration:
karappiDumbai
yillAraik kANin nirappiDumbai
ellAm
orungu keDum
karapp(u)
iDumbai – disease of hiding from those who seek alms
yillAraik
kANin – when a person devoid of that disease is seen
nirapp(u)
iDumbai ellAm – all the misery of poverty and not having
orungu
keDum – together will destroy.
When a person devoid of the disease of hiding what
he has in his possession, the miseries of a person seeking alms from such, will
all destroy together. Since hiding the possessions is said to be a disease,
vaLLuvar hints at the necessity of getting rid of that disease.
The
miseries of poverty of that who seeks alms will all together perish
Seeing
persons devoid of the disease of hiding possessions they cherish”
இன்றெனது
குறள்:
இருப்பதொளிக்
கும்நோய் இலார்முன் கெடுமே
வருத்தும்
இரத்தலாம் துன்பு
iruppadoLikk
kumnOy ilArmun keDumE
varuththum
iraththalAm thunbu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam