27th
Feb 2015
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
(குறள் 1038:
உழவு அதிகாரம்)
ஏரினும் நன்றால் - ஏர் கொண்டு உழுதலிலும் நன்றென்பது
எருவிடுதல் - பயிருக்கு தகுந்த உரமிடலாம்
கட்டபின் - களை நீக்கிய பிறகு
நீரினும் நன்றதன் - நீர்ப் பாய்ச்சுதலிலும் நன்றாம்
காப்பு - அப்பயிரைக் காவல் செய்து காப்பது
இக்குறளில் ஏர் கொண்டு உழுதல், உரமிடுதல், களை நீக்குதல், நீர்ப்
பாய்ச்சுதல், மற்று விளைந்த பயிரை காவல் செய்து காத்தல் என்ற ஐந்து செயல்களையும் வரிசைப்
படுத்தி அவற்றின் தேவையைக் கூறுகிறார். ஏர் கொண்டு உழுதல் நன்றுதான். அதையுவிட உரமிடுதல்
நன்றாம். உரமிட்டால் மட்டும் போதாது, களை நீக்க வேண்டும். களை நீக்கினால் மட்டும் போதுமா?
நன்கு வரப்புயர நீர்ப்பாய்ச்ச வேண்டும். இவ்வளவும் செய்து பயிர் விளைத்தபின், அப்பயிரைக்
காப்பதற்காக காவல் செய்வதே மிக்க நன்றாம்.
இவ்வாறு பயிர் விளைவிக்கத் தேவையான ஐந்து கூறுகளையும், அவற்றை
இன்றியமையாமையை ஏறுவரிசையிலும் கூறுகிறார் வள்ளுவர் இக்குறளில்
Transliteration:
Ernium nanRAl
eruvidudal kaTTapin
nIrinum nanRadan
kAppu.
Ernium nanRAl – More
than ploughing it is important to
eruvidudal – fertilize
the soil
kaTTapin – After
removing all weeds
nIrinum nanRadan – irrigate
the fields sumptuously; but more than that
kAppu – important
it is to safeguard the bounty of crops
In this verse, vaLLuvar lists the five different tasks to
be done in farming in their order of importance. They are ploughing,
fertilizing, removing the weeds, irrigating, and finally safeguarding the
crops, respectively. They are listed in the order of their importance. Cursory
reading would make the verse to read as if the importance all tasks except the
task of safeguarding the crops are underplayed.
The verse thus says: It is good to plough. But more than
that, the soil has be to feritilized; More importantly, weeds need to be
removed in the filed; More than that, proper irrigation is imperative for the
good crops. Above all is safeguarding the bounty of crops from birds and other
ways of losing it.
“More than
ploughing, fertilizing is important; after weeded
more than irrigating,
imperative for the crops to be guarded”
இன்றெனது
குறள்:
உழுதலிலும்
நன்றுரமாம் நீக்கிகளை தண்ணீர்
முழுக்காட்
டலில்காவல் நன்று
uzhuthalilum nanRuramAm nIkkikaLai thaNNIr
muzhukkAT dalilkAval nanRu.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam