பிப்ரவரி 26, 2015

குறளின் குரல் - 1043

26th Feb 2015

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
                    (குறள் 1037: உழவு அதிகாரம்)

தொடிப் - ஒரு பலம் (ஒரு பங்கு)
புழுதி - மட்தூள்
கஃசா - கால் பலமாய் (கால் பங்காய்)
உணக்கின் - உலருமானால்
பிடித்தெருவும் - கைப்பிடி எருவும்
வேண்டாது - தேவைப்படாமல்
சாலப்படும் - நிலமானது செழிப்பாகும் (பயிரும் நன்கு விளையும்)

இக்குறள் நிலத்தை வளப்படுத்து வழிமுறை பற்றியது. அதிக விளைச்சல்தரும் நிலத்தை உருவாக்குவது எப்படி என்று வள்ளுவர்கால விவசாய குறிப்பு. ஒரு பங்கு மணலானது கால் பங்காக ஆகும் ஆளவுக்கு வெயிலில் உலரச் செய்தால், கைப்பிடி எருகூட தேவையில்லாமலேயே நிலமானது வளமுறும். விளைவும் பெருகும் என்கிறது இக்குறள்.

தொடி என்பது ஒரு பலம் அளவையும், கஃசு என்பது அதன் கால் பங்கையும் குறிப்பதாகும். இவையெல்லால் பழந்தமிழர் முகவை அளவுகள், இப்போது ஏறக்குறைய வழக்கொழிந்தவை.

Transliteration:

toDippuzudi kahsA uNakkin piDithteruvum
vENDAdu sAlap paDum

toDip – one ounce ( measure )
puzudi – of soil
kahsA  - to reduced to ¼ ounce (measure)
uNakkin – if dried
piDithteruvum – even handful of fertilizer
vENDAdu – not needing
sAlappaDum – the soil becomes rich to cultivate

This verse is a tip from vaLLuvars’ period, as to how to make a cultivating land rich in soil without having to fertilize it. If the dirt is shrunk and reduced to one fourth of its initial measure, by drying it, without needing even the handful of feritilizer, the soil of a cultivating land turns rich and hence the farm produce will also be abundant.

“If the dirt spread is dried to reduce to one quarter measure,
 cultivating land without needing fertilizer is farmers’ treasure”


இன்றெனது குறள்(கள்)

ஒருபங்குக் காலாக மட்தூள் உலர
எருவுமின்றி நன்குவிளை யும்

orupanguk kAlAga maTtuL ulara
eruvuminRi nanguviLai yum

பங்குலர்ந்து காலாக மட்தூள் நிலம்பொலிந்து
பொங்கும் விளைச்சலிலே நன்கு

pangularndu kAlAga maTtuL nilampolindu
pongum viLaichalilE nangu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...