21st
Feb 2015
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
(குறள் 1032:
உழவு அதிகாரம்)
உழுவார் - உழவுத்தொழிலை நேரடியாகவோ, அல்லது பின்னிருந்தோ
செய்வோரே,
உலகத்தார்க்கு - உலகை என்னும் ஊர்த்தியின் சக்கரத்துக்கு
ஆணி - அச்சாணி போன்றோர்,
அஃதாற்றாது - அத்தொழிலைச் செய்யாமல்
எழுவாரை எல்லாம் -மற்ற தொழில்களை மேற்கொண்டு செய்வோரை எல்லாம்
பொறுத்து - தாங்கி, அவர்கள் உணவுக்கான பொறுப்பைச் சுமந்து
மீண்டும் உழவோரையும், உழவுத் தொழிலையும் சிறப்பித்து ஒரு
குறள். உழவுத் தொழிலைச் செய்யாது பிற தொழில்களை மேற்கொண்டோரையும் தாம் செய்யும் உழவுத்
தொழிலால் புரத்தலால், உழவர்களே, உலகம் என்னும் பெரும் ஊர்திக்கு அச்சு போன்றோர். பரிமேலழகர்
கூறுவதுபோல, உழவோர் என்போர் உழுவோர் மற்றும் உழுவிப்பார் என்ற இரு சாராரையும் குறிப்பதாகும்.
Transliteration:
uzhuvAr
ulagaththArkku ANiah dARRAdu
ezuvArai
ellAm poRuththu
uzhuvAr –
Those engaged in the farming and cultivation directly or indirectly
ulagaththArkku –
to the vehicle that the world is
ANi –
are like lynch-pin
ahdARRAdu –
Not being in that profession
ezuvArai
ellAm – and those that pursue other professions
poRuththu –
bearing the burden of feeding them all.
Another verse that sings the glory of farming
community! Since the farming community bears the burden of feeding even the
people that don’t take farming as their profession or duty and pursue other
professions, the farming community is considered the lynch-pin of the world for
its movement.
The world uzhuvAr implies both the involved in
farming and cultivation directly and indirectly.
“The
lynch-pin of the world is ploughing community sweating daily on soil
to feed even others that work in other
professions, unwilling for this toil”
இன்றெனது
குறள்:
உழவிலாது
மற்றாற்று வோரையும் தாங்கும்
உழவோரே பூமிக்கச்
சாம்
uzhavilAdu maRRARu vOraiyum tAngum
uzhavOrE pUmikkach chAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam