பிப்ரவரி 20, 2015

குறளின் குரல் - 1037

104: (Agricultural farming - உழவு)

[An important chapter in this monumental work, without which the entire human race and all the creative works would never be possible, including this work. Without the farmers using the plough to cultivate land and produce food, there would be no pondering of virtues, or wealth or other pleasures of the world. Everything that we think, speak, write or enjoy come after the efforts of those that toil behind that plough to produce the food for the entire human race. This chapter is a dedication to that honorable profession]

20th Feb 2015

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
                    (குறள் 1031: உழவு அதிகாரம்)

சுழன்றும் - ஏர்பிடித்து உழும் தொழில் மற்ற தொழில்களைவிட கடினமாயினும்
ஏர்ப்பின்னது உலகம் - உணவின்றி உலகில்லையாதலில், ஏர்பிடிப்போர் பின்செல்லும் இவ்வுலகே
அதனால் உழந்தும் - அதனாலே கடினமானதாகவே இருந்தாலும்
உழவே தலை - உழவுத் தொழிலே எல்லாதொழிகளிலும் முதன்மையானது.

உலகில் உள்ள தொழில்களிலெல்லாம் கடினமான தொழில் ஏரின் பின்சென்று நிலத்தை அகழ்ந்து பயிர்களை விளைக்கும் தொழிலென்பதால் உலகம் மற்ற தொழில்களையே விரும்பிச் செய்யுமானாலும், உலகம் அவ்வுழவுத் தொழிலை நம்பித்தான் இருக்கிறது. ஆகையால் உழவு செய்வது கடினமாயினும் அதுவே எல்லாத்தொழில்களிலும் முதன்மையானது.

உழவுத்தொழிலையும், அதனால் வரும் விளச்சலையும் நம்பிதான் உலகமே இருப்பினும், விஞ்ஞான மயமாகிவிட்ட உலகில் பல கருவிகள் உழவுத் தொழிலை இலகுவாக்கி விட்டிருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். உழவுத்தொழில் வர்த்தக முறையில் மிகவும் ஈட்டம் தரும் தொழிலாக உள்ளதால், இது அவ்வகையிலும் முதன்மையான தொழிலாகவே உள்ளது.

Transliteration:

suzhandRumErp pinnadu ulagam adanAl
uzhandum uzhavE thalai

suzhandRum – the profession of farming, though more difficult than others
Erppinnadu ulagam – the world goes behind men that wield plough for its sustenance
adanAl uzhandum – because of that, though difficult to plough
uzhavE thalai – the profession of farming the foremost.
Among all the professions of the world, farming where a farmer is behind the plough to cultivate the land to produce the food we all enjoy for life sustenance, is the most difficult one and most people would rather not choose it. Depsite that, the world is always behind those that wield plough; hence the profession of farming is the first and foremost among all.

Though the world is dependent on the farming community,  the industrialized world with its scientific advancemens has made the profession an organized and easy one with more automated tools to make it attractive for commercial entrepreneurship. The profession is definitely profitable and hence it is still the foremost among all the professions. After all the world cannot live on any other tools and techniques if it does not have the food for its sustenance of life force.

“The world spins around many professions, but behind the plough to farm
 Hence, though difficult it’s the foremost of all profession is accepted norm”


இன்றெனது குறள்(கள்):

உழவினைச் சுற்றித்தான் யாவும் உலகில்
உழவுத் தொழிலே முதல்

uzhavinaich chuRRiththAn yAvum ulagil
uzhavuth thozhilE mudal

மெய்வருத்திச் செய்தும் உழவால்தான் இவ்வுலகே
செய்தொழிற் கெல்லாம் முதல்

meivaruththich seidum uzhavAlthAn ivvulagE
seithozhiR kellAm mudal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...