28th
Dec 2014
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
(குறள் 977:
பெருமை அதிகாரம்)
இறப்பே புரிந்த
- எல்லை மீறுகை
தொழிற்றாம் - செயல்களைச் செய்வர்
சிறப்புந்தான் - சிறப்பாம் பெருமையானது
சீரல்லவர்கண் - பொருந்தாத சிறுமைக் குணம் கொண்டவர்களிடம்
படின் - ஏற்படுமானால்
இக்குறளுக்கான
பரிமேலழகர் உரை சற்றே குழப்பமாக உள்ளது. இக்குறளின் பின்பகுதி பொருள் விளங்குவதாயும்,
முற்பகுதி எளிதாக விளங்காததாயும் உள்ளது. சிறப்பாம் பெருமை, பொருந்தாத சிறுமைக்குணம்
கொண்டவர்க்கு ஏற்படுமானால், அவர்கள் மற்றவர்கள் வருந்தும் படியாக, வரம்பு மீறுதலையே
செய்வர் என்று குறள் பொருள் படவேண்டும். “இறப்பே” என்ற சொல் வரம்பு மீறுதலையே குறிக்கிறது.
தகுதியில்லார்க்கு
வழங்கப்படும் எத்தகு பெருமையும் தவறாகவே பயன்படுத்தப்படும் என்பதே மையக்கருத்து.
Transliteration:
iRappE purinda thozhiRRAm chiRappundAn
ChiRal lavarkaN paDin
iRappE purinda – transgressing by going beyond the limits
thozhiRRAm – they will do such deeds
chiRappundAn – the glory
ChiRallavarkaN – that does not fit the people of small mindedness
paDin – if they get it.
ParimElazhagars’
commentary for this verse, is a bit confusing. Though the later half of the
verse is easy to understand, the first part is not very apparent in its meaning.
The word “iRappE” in the verse means, crossing the limits. The verse must be
interpreted thus: If lowly people get greatness or glory, they will act
excessively for others to suffer.
“Though the lowly people, small minded, may
get glory
In their deeds, they will cross all limits to
others worry”
இன்றெனது
குறள்:
பெருமையும்
ஒவ்வாச் சிறுமையாளர் பெற்றால்
வருத்தும்
வரம்புமீறி செய்து
perumaiyum ovvAch siRumaiyALar peRRAl
varuththum varambumIRi seidu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam