டிசம்பர் 25, 2014

குறளின் குரல் - 981

26th Dec 2014

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
                                    (குறள் 975: பெருமை அதிகாரம்)

பெருமையுடையவர் - பெருமையெனும் அணியினைப் பூண்டவர்
ஆற்றுவார் - செய்வார்
ஆற்றின் - செய்தால்
அருமை உடைய - செய்வதற்கு அரியவாகிய
செயல் - செயல்களை

பெருமையெனும் அணியினைப் பூண்டவர்கள் ஆற்றுதற்கு அரிய செயல்களையே செய்வார்கள், அவற்றையும் செய்வதற்கு உரிய முறையிலே, என்கிறது இக்குறள். அதாவது அரிய செயல்களை உரிய முறையில் செவ்வனே செய்பவர்களே பெருமையெனும் அணியைப் பூண்டவர்கள்.

கம்பராமாயணம் இதையே வேறுவிதமாகச் சொல்கிறது. “பெருமையோ ராயினும் பெருமை பேசலார் கருமமே யல்லது பிறிதென் கண்டது”, என்று!

Transliteration:

Perumai uDaiyavar ARRuvAr ARRin
Arumai uDaiya seyal

PerumaiyuDaiyavar – those who are great and glorious
ARRuvAr – will do
ARRin – when they do
Arumai uDaiya – that which are proper and rare accomplishments
Seyal – and such endeavors, deeds.

Those that are glorious and great shall do only rare and precious to accomplish, that too in perfect order, says this verse. In other words, only those who accomplish rare deeds, that too in perfect order are the one that get glory and prideful greatness.

“People of prideful glory and greatness will do
 deeds that are rare, and in perfect order too!”


இன்றெனது குறள்:

போற்றும் அருஞ்செயலே ஆற்றுவர் நற்பெருமை
நோற்ற நலத்தோராற் றின்

pORRum arunjcheyalE ARRuvar naRperumai
nORRa nalaththorAR Rin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...