18th
Dec 2014
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
(குறள் 967:
மானம் அதிகாரம்)
ஒட்டார் - பகைவர்
பின் சென்று - அவரை அண்டி
ஒருவன் வாழ்தலின் - ஒருவர் தம் வாழ்வைக் காத்துக்கொள்வதிலும்
அந்நிலையே - அத்தகைய இழிநிலையில் இல்லாமல்
கெட்டான் எனப்படுதல் - அழிந்துபட்டான் என்றறியப் படுதலே
நன்று - மானமுள்ளவர்க்கு நன்றாகும்
பகைவரை அண்டி ஒருவன் மானமிழந்து பிழைப்பதிலும், மானத்தைக்
காப்பதற்காக ஒருவன் வாழாது அழிந்துப்பட்டான் என்பதே நன்று என்கிறது இக்குறள். மானமற்றோரே
தாம் வாழ்வதற்காக பகைவரை அண்டி அவரிடும் பிச்சையினால் உயிர் வளர்ப்பர்
Transliteration:
OTTArpin
chenRoruvan vAzhdalin annilaiyE
keTTAn
enappaDudal nanRu
OTTAr -
enemies
pin
chenR(u) – going behind them
oruvan
vAzhdalin – to save and live at their mercy
annilaiyE –
that despicable, dishonorable, shameful state
keTTAn
enappaDudal – known to be destroyed, dead is
nanRu –
better.
Instead of living dishonorably, under the mercy of
an enemy, honorably losing life, perish is better, says this verse. Only
dishonorable will indulge shamefully living under enemies just for their
survival.
“To
perish without losing honor is better
than going behind foe to live like a litter”
இன்றெனது
குறள்:
பகையண்டிப் பால்பருகி இன்னுயிர்காக் கின்ற
வகையினும் சாக்காடே மேல்
pagaiyaNDip pAlparugi innuyirkAk kinRa
vagaiyinum sAkkADE mEl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam