டிசம்பர் 16, 2014

குறளின் குரல் - 972

17th Dec 2014

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
                                    (குறள் 966: மானம் அதிகாரம்)

புகழ் இன்றால் - அதனால் வரும் புகழொன்றும் இல்லை
புத்தேள்நாட்டு - வானோர் நாட்டுக்கு; சொர்க்கமென்று அறியப்படுவது
உய்யாதால் - கொண்டும் சேர்க்கும் தகுதியையும் தாராது
என்மற்று - அவ்வாறிருக்கையில் ஏன்?
இகழ்வார் - தம்மை தூற்றூவார்
பின் சென்று - பின்பு மானத்தைவிட்டுச் செல்லுகின்ற
நிலை - நிலையில் ஒருவர் இருக்கவேண்டும்

புகழும் தாராத, வானோர் உலகுக்கும் சேர்க்காத மானமற்ற செயலாம் தம்மைத் தூற்றி இகழுபவர் பின்னாலே ஒருவர் ஏன் செல்லவேண்டும்? என்று வினவுகிறார் வள்ளுவர். “புத்தேள் நாடு” என்பது வானோர் உலகாம்.

தம் மானத்தைக் காப்பவர், பசி நோயால் உடல் வற்றி எலும்புக் கூடாகி அழியும் நிலை நேர்ந்தாலும், தகுதியில்லாதார் பின்னே சென்று தமது வறுமையை எடுத்துக் கூறுவரோ? கூறமாட்டார்கள். சொல்லாமலே குறிப்பால் அறிந்துகொள்ளும் பேரறிவு உடையாரிடம் தமது துன்பத்தினைக் கூறாமலிருப்பரோ? கூறுவார்கள் என்கிறது கீழ் காணும் நாலடியார் பாடல்.

என்பாய் உகினும் இயல்பிலார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார்; - தம்பாடு
உரையாமை முன்னுணரும் ஒண்மை உடையார்க்கு
உரையாரோ தாமுற்ற நோய்.

நன்றாகக் கஸ்தூரி மணம் கமழும் கூந்தலையுடையவளே! மானம் உடையாரது பெருமித வாழ்க்கை இப்பிறப்பிலும் நன்மையை உண்டாக்கும்; இறந்த பிறகும் புகழைத் தரும்; ஒழுக்க நெறிகள் கெடாத புண்ணியத்தால் மறுமையிலும் நன்மையை விளைவிக்கும். ஆதலால் இதன் மேன்மையை நீ உணர்வாயாக! என்கிறது கேள்வியாகக் கேட்காமல், கருத்தாகக் கூறும் மற்றுமொரு நாலடியார் பாடல்

இம்மையும் நன்றாம் இயல்நெறியும் கைவிடாது
உம்மையும் நல்ல பயத்தால்; - செம்மையின்
நானம் கமழும் கதுப்பினாய்! நன்றேகாண்
மான முடையார் மதிப்பு.

Transliteration:

pugazhinRAl puththELnATTu uyyAdAl enmaRRu
igazhvArpin senRu nilai?

Pugazh inRAl – no fame because of that
puththEL nATTu - heavens
uyyAdAl – does not take you to (heavens)
enmaRRu – then why?
igazhvAr – those that  ill-treat, deride
pin senRu -  go behind them (knowingly)
nilai? – and keep them in such pitiful state?

Why would somebody go behind that ill-treat, deride and berate when such dignity diminishing, honor killing act, does not bring fame nor take a person to heavens for being so tolerant,  asks this verse.

Though due to abject poverty, become feeble and boney, people that care for dignity shall not go behind worthless seeking their help; at the same time, they would share their state of misery with other noble souls that can understand without being told, which is not considered diminutive to their dignity, says a nAlaDiyAr poem.

Another poem asserts people of dignity will have fame in this birth and because of their merit of good conduct, shall also attain heavenly abode after their passing away. Hence one shall realize the greatness of dignity.

“Why would anyone go behind that who deride?
 when it does not yield fame nor heavens’ pride?


இன்றெனது குறள்:

இகழ்வார்பின் ஏகுதலேன் இம்மைப் புகழும்
தகவுவான் ஏகவுமின் றேல்    (தகவு வான் ஏகவும் இன்றேல்)

(ஏகுதல் - செல்லுதல்; தகவு - தகுதி)

igazhvArpin EgudalEn immaip pugazhum
thagavuvAn Egavumin REl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...