28th
Nov 2014
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
(குறள் 947:
மருந்து அதிகாரம்)
தீ அளவு - பசியின் அளவு
அன்றித் - (அறியாதது மட்டும்) அல்லாமல்
தெரியான் - (உண்ணும் காலமும்) தெரியாது ஒருவன்
பெரிது உண்ணின் - மிகுந்த அளவில் உண்ணுவானே ஆனால்
நோய் - வியாதிகளை
அளவின்றிப் படும். - இவ்வளவென்று சொல்லமுடியாத அளவுக்கு பட்டுழல்வர்.
பசியின் அளவு
இன்னதென்று தெரியாமலும், எப்போது உண்ணுவதற்கு ஏற்றகாலமென்று தெரியாமலும், ஒருவன் பெரும்
தீனி உண்பானாயின், அவன் அதன் காராணமாகவே இன்னளவு என்று கூறவியலாத அளவுக்கு வியாதிகளுக்கு
ஆட்பட்டழிவான் என்று அளவும், நேரமும் அறிந்தே உண்ணவேண்டியதை வலியுறுத்துகிறார் வள்ளுவர்
இங்கே.
முதுமொழிக் காஞ்சி, “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது”
என்பதும், ஆத்திச் சூடி, “மீதூண் விரும்பேல்”
என்பதும் இக்குறளின் கருத்தையொட்டி, உணவை மிகுந்த அளவில் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்துத்தவேதான்.
Transliteration:
tIyaLa
vanRit teriyAn periduNNin
nOyaLa
vinRip paDum
tI
aLavu – without knowing the heat of hunger (extent of
hunger)
anRit –
not only that
teriyAn –
not knowing the time duration required between two meals
perid(u)
uNNin – if a person eats excessively
nOi -
Diseases
aLavinRip
paDum – will be subject to it without measure.
Without knowing the extent of hungers’ heat, and the
time to eat each meal, if a person eats excessively, gluttonously he shall be
subject to immeasurable diseases and destroyed, says this verse underscoring
the importance of eating in time and when the intensity of hunger is right
enough to feed self.
The following Mudumozhi kAnchi and Athichoodi lines
stress the importance of not eating gluttonously: “uNDi veyyOrkku uRupiNi
eLidu” (Mudumozhi Kanchi); “mIdUN virumbEl” (Attich chUDi).
“Gluttonous
eating not knowing the extent of heat of hunger
nor the time, shall get one diseases
immeasurable to linger”
இன்றெனது குறள்:
பசியளவை
எண்ணார் பெரிதளவில் உண்பார்
நசித்தழிவார்
நோய்வாயிற் பட்டு
pasiyaLavai
eNNAr peridaLavil uNbAr
nasitthazhivAr
nOivAyiR paTTu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam