நவம்பர் 25, 2014

குறளின் குரல் - 950

25th Nov 2014

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
                                    (குறள் 944: மருந்து அதிகாரம்)

அற்றது அறிந்து - எவ்வுணவு உண்டால் நன்றாக செரிமானம் ஆனது என்று அறிந்து கொண்டு 
கடைப்பிடித்து - அதையே பழக்கமாகக் கைக்கொண்டு
மாறல்ல துய்க்க - அப்பழக்கத்தினிறும் மாறாமல் உண்ணுக
துவரப் பசித்து - நன்றாகப் பசித்த பிறகு.

“பசித்துப் புசி” என்றொரு சொலவடை உண்டு. அதை வலியுறுத்துவதே இக்குறள். முன்னர் செரித்த  உணவு வகைகள் என்னவென்று அறிதலும், புரிதலும், பின்னர் அதையே பழக்கமாகக் கொள்ளுதலும், அந்த உணவு உண்ணும் பழக்கம் (உண்ணும் நேரம், அளவு, கால இடைவெளி இவற்றை உள்ளடக்கியது) மாறாமல், ஆனாலும், நன்றாகப் பசித்த பிறகே ஒருவர் அடுத்த வேளைக்கான உணவை ஒருவர் புசிக்க வேண்டும்.

Transliteration:

aRRadu aRindu kaDaipiDiththu mARalla
thuikka thuvarap pasiththU

aRRadu aRindu – Understanding which would would agree with their system to digest
kaDai piDiththu – keeping that as a regular food habit
mARalla thuikka – not going out of that habit (to a great and practical extent)
thuvarap pasiththU – only eat after when really hungry.

Eat only when hungry” is a well-known principle. This verse is to emphasize the same. Knowing which food is agreeable to a persons’ digestive system, keeping that as a regimen, and not chaging it (the time to eat, measure and the time duration in between), yet, only when hungry a person shall eat. That’s the only way to keep the life sustaining for many years.

Understanding what digests, removing others from diet,
And only when really hungry, for health and long life eat”

இன்றெனது குறள்:

எதுசெரிக்கும் என்றறிந்து ஒவ்வாத நீக்கி
அதுவும் பசித்தே புசி

eduserikkum enRaRindu ovvAda nIkki
aduvum pasithtE pusi


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...