92: ( Wanton women- வரைவில் மகளிர் )
[One of
the oldest of professions has been the service of sexual favors to men for
money or exchange of other favors. This chapter is about what Tamil euphemism
as called such women, for centuries as “common woman”, or in more prevalently
term “prostitutes”. Even the word “varaivil” is euphemism for being not
confined to the moral code set for woman. Though general feministic ideas
always raise a flag in defiance, asking why should it be different and demand a
fair and equal moral code for both sexes, they forget that it is nature’s
design to create two different beings to for world to create, recreate,
procreate and flourish; though nature has not set what the boundaries of duties
and codes for each sex, through evolution the world has come to its practices
of what we see. Though it has been cursed for centuries and moralists have
spoken about derisively, to eradicate the profession, none has really worked.
The egos between men and the many wars that have been fought acorss the breadth
and width of world geography, many families have been left distraught and alone
without men to take care of. The economic needs to feed self or children has
pushed them to the corners of the society to sell whatever they have, again to
the exploiting men that have made it as a service. It is sad that vaLLuvar
dubbed as the “world poet” had not really researched the societal reasons and
causes that have led to the profession]
23rd Oct 2014
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
(குறள் 911: வரைவில் மகளிர் அதிகாரம்)
அன்பின் விழையார் - அன்பின் காரணமாக ஒருவரை விரும்பாது
பொருள் விழையும் - அவரிடமுள்ள
பணத்துக்காக அவரை விரும்புகின்ற
ஆய்தொடியார் - அழகிய பெண்களிர்
இன்சொல் - பேசுகின்ற
இனிமையான சொற்கள்
இழுக்குத் தரும் - ஒருவருக்கு
மாசு தருவனவாக அமையும்
பெண்வழிச் சேரல் அதிகாரத்தில் பெண்களைச் சார்ந்து வாழ்வதையும், வாழ்பவர்களையும்
பற்றி இடித்துரைத்தே எல்லா குறள்களும் எழுதப்பட்டன.
ஆனால் அது சமூகத்தில் சிறிய அங்கம் என்பதை, அதைப்பற்றி பல இலக்கிய மேற்கோள்கள் இல்லாமையே
சுட்டுகிறது. இவ்வதிகாரத்தைப் பற்றி பல இலக்கிய மேற்கோள்கள் உள்ளன என்பதாலேயே, வரைவில்
மகளிர் என்பாருடைய தொன்மையும் நமக்குப் புலனாகிறது.
அன்பின் காரணமாக ஒருவரை விரும்பாமல், ஒருவருடைய பொருளுக்காக அவரை விரும்புகிற
அழகான பெண்கள் கூறுகிற இனிமையான மொழிகள், பிடித்தமானவையாக இருப்பினும், அவருக்கு மாசு
தருவதாகவே அமையும். கையில் காசு தீர்ந்தவுடன் விலகுகிற பெண்களால், பொருள் நட்டமும்,
மன வருத்தமும் வருவது மட்டுமல்லாது, சமூகத்தில் இழிவும் வருவது உறுதி.
புறநானூற்று வரிகள், “தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல்
மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைகஎன் தாரே” என்கிறது வரைவில் மகளிரை.
ஏறக்குறைய சமகால நீதி நூலான நாலடியுரும் பலவாறு இவர்களது இயல்பைக் கூறுகிறது.
அது, “அவரன்பும் வாரி அறவே அறும்” என்றும், “அவரன்பும் கையற்ற போதே அறும்”
என்றும், “கொடுப்பது ஒன்றில்லாரைக் கொய் தளிரன்னார் விடுப்பர் தங்கையால் தொழுது”
என்றும் கூறுகிறது.
Transliteration:
Anbin vizhaiyAr
poruLvizhaiyum AithodiyAr
Insol izhukkuth tharum
Anbin vizhaiyAr – Not
desiring man because of love
poruLvizhaiyum – but
desiring what wealth and gifts he brings to the table
AithodiyAr - the beautiful women
Insol – the
sweet speak they do
izhukkuth tharum – only
will bring shame to men.
Previous chapter discussed leaning on ladies and leading life by their
design in detail, slighting men of such demeanor; but that is seen only in a
small portion of the society. It is very evident by the lack of many literary
quotes to support that. At the same
time, the number of literary quotes for this chapter indicate the antiquity of
the age old profession of selling services for economic favors, though by the
ill designs of the socitey or evolutionary nature of the societies across the
globe. Lust for sexual pleasure is the basic instinct of humans; and
exploitation when there is an opportunity is also the basic immorality of the
sociieties; both are irradicable in someways.
Women of sweet words that do not desire someone for love, but for what
they bring as gifts and wealth, will bring only shame to somebody and be a
blemish to them. Because of women that
leave when wealth is depleted, loss of prosperity, loss of self-worth, and
shame before the society ensue, says this verse.
Many literary examples from puranAnURu, nAlaDiyAr, kamba rAmAyaNam,
chIvaga chintAmaNi have expressed the same thought in sarcastic and direct
hitting ways.
“Women that desire not
because of love, but because of wealth
will bring only shameful blemish to men that
seek them in stealth”
இன்றெனது குறள்:
காசுக்காய் காதலிக்கும் அன்பிலாப் பெண்டிர்சொல்
மாசுதரும் புன்சொல்லா கும்
kAsukkAi kAdalikkum anbilAp peNDrisol
mAsutharum punsollA gum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam