அக்டோபர் 22, 2014

குறளின் குரல் - 916


22nd Oct 2014

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
                        (குறள் 910: பெண்வழிச்சேறல் அதிகாரம்)

எண் சேர்ந்த - வினைபால் சென்ற
நெஞ்சத்து - உள்ளத்துச் சிந்தனையும்
இடன் - அதனால் வரும் விளைபயனாம் செல்வமும் (அல்லது) திடன் என்று கொண்டால் நெஞ்சுரம் என்று கொள்ளலாம்.
உடையார்க்கு - கொண்டவர்க்கு
எஞ்ஞான்றும் - எப்போதும்
பெண்சேர்ந்தாம்  - பெண்ணைச் சேர்ந்து அதிலேயே ஒழுகும்
பேதைமை - மயக்கம்
இல் - இல்லை.

வினையும் அதை ஆற்றலுமென்று இரண்டிலுமே தம் முழு சிந்தனையையும் கொண்டவராகி, அதன் விளைபயனாக வரும் செல்வமும் கொண்டவர்க்கு ஒரு பெண்ணைச் சேர்ந்து முயங்கிக் கிடப்பதாய மயக்கம் இல்லை என்கிறது இக்குறள்.

பரிமேலழகர் “இடன்” என்பதை “பொருள்” என்று பொருள் செய்து, அதற்கு “இடனின்றி இரந்தோர்க்கு” மற்றும் “இடனில் பருவத்தும்” என்ற வரிகளை மேற்கோளாகக் காட்டிகிறார். “நெஞ்சத் திடன்”, என்பதை உள்ளத்து உரமும் என்றும் கொள்ளலாம். “எண்” என்பதும், “எண்ணம்” என்பதைக் குறிப்பதால் அது வினைக்கண் முனைந்த எண்ணம் என்று கொள்வதும் பொருந்துகிறது.

Transliteration:

eNsErnda nenjath thiDanuDaiyArkku enjAnRum
peNsErndAm pEdamai il

eN sErnda – Focused on work and the deeds there in
nenjathth(u) – mind set on that work
iDan – the resulting fruit of that labor (or) if the word is taken as “thiDan” it would mean the resolve
uDaiyArkku – one that has (wealth or resolve)
enjAnRum - always
peNsErndAm – to be lost in a woman’s company
pEdamai – such foolishness
il – is not there.

For persons being focused in the work at hand and its execution with mind set on both, with the resulting fruits of such focused effort, the foolishness of being lost in the womans’ company is not there. Other way around is also true. Those who are lost in the company of a woman can never be focused on work or be successful also.

The word “iDan” has been interpreted as “wealth” by Parimelazhagar and he cites couple of reference lines from other poetry to justify that. If the word has been interpreted as “thiDan”, it would mean the resolve that goes well with the previous work of “heart”. The word “eN” does not mean number, but, “thinking” in this verse.

“One that is focused on work, with resolve to accomplish and gain
 shall not be foolish to be lost for ever in the company of a woman”


இன்றெனது குறள்(கள்):

சிந்தனையும் நெஞ்சுரமும் கொண்டார்க்கு இல்லைபெண்
வந்திக்கும் பேதைமையென் றும்

chindanAiyum nenjuramum koNDArkku illaipeN
vandikkum pEthaimaiyen Rum

வினைக்கண் நெஞ்சும் விளைபயனும் கொண்டார்
மனைமேல் மயக்கம்கொள் ளார்

vinaikkaN nenjum viLapayanum koNDAr
manaimEl mayakkamkoL LAr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...