அக்டோபர் 17, 2014

குறளின் குரல் - 911

17th Oct 2014

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
                        (குறள் 905: பெண்வழிச்சேறல் அதிகாரம்)

இல்லாளை - மனையாளினிடம்
அஞ்சுவான் - பயப்படுகிறவன்
அஞ்சும் - பயப்படுவான்
அற்று எஞ்ஞான்றும் - இல்லாமல் எந்நாளும்
நல்லார்க்கு - நல்லோர்க்குக் கூட
நல்ல செயல் - நல்லவற்றைச் செய்வதற்கு

தன் மனையாளிடம் அஞ்சி நடக்கிடறவன், நல்லவர்களுக்குக் கூட நல்லவற்றைச் செய்வதற்கு எந்நாளும் பயப்படுவான்.  நல்லோர்க்கு ஈய வேண்டிய நாட்களிலும், சான்றோர்க்கும், அருந்தவத்தோர்க்கும்கூட மனவிக்குப் பயந்த ஒருவன் தன் இல்லத்தரனுக்கு உண்டாய கடமைகளைச் செய்யாது தவறுதலையே இக்குறள் சொல்கிறது.

மனைவிக்குத் தேவையான நேரங்களில் பயப்படுதல்கூட தவறில்லை. ஆனால் எல்லா நேரங்களிலும், வீட்டுத்தலைவனாக, நல்லோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் தவறும் ஒருவனையே இக்குறள் சுட்டுகிறது.

Transliteration:

illALai anjuvAn anjumaR RenjAnRum
nallArkku nalla seyal

illALai – to wife
anjuvAn – being fearful
anjum - will fear
aRRu enjAnRum – without always
nallArkku – even for good people
nalla seyal – doing good

A person that is fearful of his wife perpetually will be fearful of doing good even to good people. As the head of the house, a man has his duties towards ascetics and erudite of the society; A fearful person can never fulfill such duties, The verse points to such insipid head of the house.

“A person who is fearful of his wife perpetually
 is also fearful to do good even to good gladly”


இன்றெனது குறள்:

நல்லார்க்கும் நல்லவை செய்யநாளும் அஞ்சுவான்
இல்லாளுக் கஞ்சிவாழ்ப வன்

nallArkkum nallavai seyyanALum anjuvAn
illALukk kanjivAzhba van

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...