16th Oct 2014
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
(குறள் 904: பெண்வழிச்சேறல் அதிகாரம்)
மனையாளை அஞ்சும் - தம்
மனைவிக்கு அஞ்சி நடுங்குகிறவன்
மறுமையிலாளன் - மறுமையில் சிறப்பு பொருந்திய பிறப்பிலாதவன்
வினையாண்மை - அத்தகையவனின் வினை ஆற்றும் திறமை
வீறு - பெருமை
எய்தல் இன்று - பெறுதல்
என்பது இல்லை.
வீட்டையே
ஆளத்தெரியாதவனுக்கு வெளியே செய்யும் வினைகளை ஆளுவது எங்கனம் என்ற கேள்வியை முன் வைக்கிறது
இக்குறள். தம்முடைய மனைவிக்கு அஞ்சுகின்றவன், மறுமையிலும் சிறப்பாக இல்லறம் ஆளுவது
இயலாதாம். அத்தகையோன் வினையாள்வது, வினை வெற்றிகரமாக முடிவுறாத நிலையே உருவாக்கும். அவ்வினையாள் திறமையால் பெருமையும் பெறுதல் என்பது
இல்லை.
வீட்டில்
எலியாக இருப்பின், வெளியில் புலியாக எப்படி வாழ முடியும்? - என்பதே இக்குறளின் உள்ளுரை
கேள்வி.
Transliteration:
manaiyALai anjum maRumaiyi lALan
vinaiyANmai vIReida linRu
manaiyALai anjum – One
who fears his wife
maRumaiyilALan – the
one who will not have glorious rebirth also
vinaiyANmai – his
ability to handle the deeds given to him
vIRu – praiseworthy glory
eidal inRu –
does attain that (what? – glory)
How a
person that is not able to govern his household, can manage the deeds assigned
to him, outside his home, successfully? – a similar question is the main theme
of this verse. A person that fears his wife cannot possibly be successful in managing
his household, in his successive births too. They will not complete what they
undertake successfully either; and they will not get glory of accomplishments
either.
After
all a mouse in the house cannot become a tiger outside!
“That who fears wife is not worthy of rebirths;
whatever they undertake.
They are
not successful to get the glory either even if actively partake”
இன்றெனது குறள்:
மறுமையற்றோர் இல்லாளுக் கஞ்சுமவர் ஒண்மை
உறுவதில்லை ஆற்றுவினை யில்
maRumaiyaRROr illALuk kanjumavar oNmai
uRuvadillai ARRuvinai yil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam