90: (Not offending the great - பெரியாரைப் பிழையாமை)
[This
chapter advises not to treat the great people slightly and be offensive to
them. A simple sweep of saying “The great” would imply collectively erudite
scholars, people of stature and capabilities, sages, saints, rulers and other
men and women who are high up in the social strata meritoriously. In connection
with overt or covert enmity towards them also, this verse cautions, such enmity
though, will not be reciprocated by them, could come back and hurt the person
who is offensive]
3rd Oct 2014
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
(குறள் 891: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)
ஆற்றுவார் ஆற்றல் - தாம் எடுத்துக்கொண்டவற்றை தம் பெருமை, அறிவு, முயற்சி இவற்றால்
செவ்வனே முடிக்க வல்லாரை
இகழாமை
- அவரது ஆற்றல்களை அவமதிக்காமல் இருப்பது
போற்றுவார் போற்றலுள் - தமக்கு
ஏதும் தீங்கு வாராது, காப்பனவற்றுள் (ஒருவர்க்கு)
எல்லாம் தலை - எல்லாவாற்றுள்ளும்
முதலாயது.
பெருமை, ஆற்றல், அறிவு, முயற்சி இவற்றால் தாம் எடுத்துக்கொண்ட
செயல்களைச் செவ்வனே செய்து முடிக்க வல்லோரை எக்காரணம் கொண்டும் அவமதிக்காமல் இருப்பதே
ஒருவர் தம்மை காப்பவற்றுக்குள் செய்து கொள்ளும் எல்லாவற்றிலும் முதலாயதாகும். ஒருவர்
தம்மை அன்னாரிடமிருந்து காத்துக்கொள்ள வேண்டியதன் தேவையென்ன? பெரியார்தம் படை, பொருள்,
அரண், நட்பு இவற்றால் அவ்வாறு பிழைத்தவற்கு ஏதேனும் வகையில் ஊறு வருமாகலின், அவற்றிலிருந்து
தற்காத்துக் கொள்ளுவது ஒருவருக்கு தேவையாகிறது.
ஆற்றலுள்ளவர் என்றதால், இக்குறளில், எவ்வகை பகையையும் எதிர்கொண்டு, முடிக்கவல்லவர் என்றும்
பொருளாகிறது.
Transliteration:
ARRuvA ARRal igazhAai pORRuvAr
pORRaluL ellAm thalai
ARRuvA ARRal - The abilities of those who successfully
handle all that is undertaken with their greatness, knowledge and effort
igazhAai – not being disrespectful to their abilities and to
themselves
pORRuvAr pORRaluL – that they have to safeguard for those who want
to safeguard themselves from miseries
ellAm thalai – prime among such precautions
One who is able to
successfully execute all that undertaken, with pride, skill, knowledge and
effort, shall not be offended or disrespected for any reason. It would be
prudent and prime to apply restraint to safeguard self from such people,
otherwise, it would come back to hurt in someway. Why is it so? Such great
people protected by their army, wealth, fortress and friendship and above of
their abilities, would definitely act against such vile from anybody to be
punitive.
It is also
important to keep in mind that the greatness is not attributed or attached to
kindness here; it implies such greatness would be able to face enmity from any
corner efficiently.
“Never
to be offensive and disrespectful to the great by any measure
is
prudent and prime among all cautions, to not invite their displeasure”
இன்றெனது குறள்:
வல்லோர் செயலிழிவாய் தூற்றாது காப்பதே
வல்லமையாய் போற்றப் படும்
valor seyalizhivAi thURRAdu kAppadE
vallamaiyAi pORRap paDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam