86: (Hostility or Hatred - இகல்)
[This
chapter is on hostility or feeling of hatred towards people; it is a fault to
avoid in anyone. In the bigger context of friendship, this is talked about as
fault to avoid. It is referred to as a disease by vaLLuvar in couple of places
again. The verses show why hostility is bad, why and how to avoid such an ill
posture]
24th Aug 2014
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
(குறள் 851: இகல் அதிகாரம்)
இகலென்ப - இகழ் என்பது அதாவது மற்றவர்களை வெறுக்கின்ற அவர்களோடு முரண்பாட்டில்
இருக்கின்ற பகையுணர்வு
எல்லா உயிர்க்கும் - எல்லா
உயிர்களிடத்தும்
பகலென்னும் - பிரிக்கின்ற,
கூடாதிருக்கின்ற
பண்பின்மை - பண்பற்ற
நிலை
பாரிக்கும் - நீடித்து
நின்று சுமையாகும்
நோய் - குற்றம், வியாதி
யாரோடும் கூடாது, எல்லோரையும்
வெறுத்துப், அவருடன் முரண் பட்டு, பகைக்கும் குணக்கேடானாது, இகல் என்று சொல்லப்படும்.
அப்பண்பற்ற நிலையானது, நீடித்து நின்று கொண்டவர்க்கே சுமையாகிவிடும் நோய் என்கிறது இக்குறள். குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்ற வழக்கு படி
குற்றமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவருக்கு, யாரிடமும் நல்லவற்றப் பார்க்க இயலாது;
அவர்களுக்கு அதனாலேயே சுற்றமும், நட்பும் அமையாது. “ஊரொடு பகைக்கின் வேரொடு கெடும்”
என்பது ஔவை வாக்கு.
Transliteration:
Igalenba ellA uyirkkum pagalennum
paNbinmai pArikkum nOi
Igalenba – what hatred or
hostility is
ellA uyirkkum –
with one and all
pagalennum – to
be in collision course and be separated ( from everyone )
paNbinmai – be
of such undesirable, virtueless disposition
pArikkum – which bears as a
burdensome, onerous
nOi – disease (embelmatically)
The hostile
posture of “igal” means hatred towards everyone, and not being in a cohesive
engagement with anyone. Such lack of virtue is an onerous disease to persons
that dwell in hostility or hatred towards others – says this verse. If a person
only sees only faults in others, there will be none close to him as relatives
or friends, says the grand old lady poet AuvayyAr as they can never see any
good in anyone. They also don’t understand the meaning of an adage, “UroDu
pagaikkin vERoDu keDum“ - if one has hoslitlity towards everyone in the town,
he is certain to be rooted out.
“Hostility towards everyone is a lack of
virtue
Weighing as a burdensome disease, it’s true”
இன்றெனது குறள்:
யாரோடும் ஒத்துவாழாக் குற்றம் உலகுயிர்க்கு
வேரோடு கெட்ட பகை.
yArODum oththuvAzhAk kuRRam ulaguyirkku
veRODu keTTa pagai
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam