20th Aug 2014
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
(குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)
அரு மறை - அரிய வாழ்வியல் செய்திகளைக்
கூறும் நீதி நூல்களைச்
சோரும் - கடைபிடிக்காது தவறும்
அறிவிலான் - பேதையர்,
அறிவீனர்கள்
செய்யும் - செய்து கொள்வர்
பெரு மிறை - பெரிய
துன்பத்தை
தானே தனக்கு - தாமே
தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)
அறிவிலிகள் தாமே தமக்கு
பெரிய துன்பத்தினை செய்துகொள்வர், நல்ல நீதிகளைக் கூறும் நூல்வழிபடி நடவாது அவற்றைத்
தவற விடுவார்களாயின். வேறு யாருமே அவர்களுக்கு துன்பம் நினைக்கவும் செய்யவும் வேண்டாம்.
நல்வழி நூல்கள் கூறுவனவற்றை உள்ளத்தே கொள்ளாமை புல்லறிவாண்மையினால் என்கிறார் வள்ளுவர்.
அவ்வாறு கொள்ளாததால் அவர்கள் துன்பத்திலேயே ஆழ்வார்கள்.
Transliteration:
arumaRai sOrum aRivilAn seyyum
perumiRai thane thanakku
aru maRai – The teachings in books of ethics
sOrum – letting them slip without practicing
aRivilAn – ignorant fool
seyyum - causes
peru miRai – great misery
thane thanakku- for self on his own
Ignorant fools
bring up on themselves great misery on their own, by not adhering by the great
teachings of ethical works of erudite. Others don’t have to intend or do
anything to cause their miseries. For those who donot know good ways on their
own and cannot understand the ways taught by ethical works, they are truly
ignorant.
“Ignorant fools not adhering to the great
teachings drawn
from
ethical works, bring misery to themselves on their own”
இன்றெனது குறள்:
நன்னூல் நவில்வழி நண்ணாத பேதையர்
துன்புசெயும் தாமே தமக்கு
nannUl navilvazhi naNNAda pEdaiyar
thunbuseyum thAmE thamakku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam