ஆகஸ்ட் 15, 2014

குறளின் குரல் - 848

15th Aug 2014

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
                        (குறள் 842: புல்லறிவாண்மை  அதிகாரம்)

அறிவிலான் - சிற்றறிவோன் ஒருவன்
நெஞ்சு வந்து - தம் உள்ளத்தில் மகிழ்வுடன்
ஈதல் - மற்றொருவரிடத்தில் வள்ளன்மையோடு ஈவது என்பது
பிறிதி யாதும் இல்லை - ஈதலின் நன்மை பற்றியோ, இம்மைக்கும் மறுமைக்கும் உறு பயனை நோக்கியோ அல்ல
பெறுவான் தவம் - அவ்வள்ளன்மையை ஏற்கின்றவனுடைய நல்வினைப் பயனே அதற்குக் காரணம்.

அறிவில்லாதவன் ஒருவருக்கு ஒன்று ஈதல் என்பது, அது நல்வினையென்பதாலோ, அன்றி, அவனுடைய அறிவினைக்கொண்டு, இம்மை, மற்றும் மறுமையில் நன்மையை வேண்டி அல்லது. ஏனெனில் அவ்வளவுக்குக் கூட நன்மை, தீமைகளை ஆராயும் அறிவு இல்லாதோன் அவன். அவ்வாறாயின், அதன் காரணம் என்னவெனில், அவனுடைய வள்ளன்மையை கொள்கின்றவனுடைய நல்வினைப் பயனே ஆகும் என்கிறார் வள்ளுவர். அறிவின்மையின் இழிமையை இடித்து, ஏளனமாகக் கூறும் குறள் இது.

Transliteration:

aRivilAn nenjuvandhu Idal piRidiyAdhum
illai peRuvAn thavam

aRivilAn – an ignorant person
nenju uvandhu – with a happiness in heart
Idal – to be benevolent to other
piRidi yAdhum illai – has no particular reason (certainly not because of the goodness of such an act)
peRuvAn thavam – it is just the good fortune and the benefit of the recipient’s good acts.

The act of benevolence with happiness, from an ignorant is not out of his awareness of good that it yields in his current and subsequent births or that he knows the merits of such an act of kindness. It is simply because of the merits of the recipient’s good penance of earlier and the current births – says vaLLuvar. The hint of sarcasm is again abundantly seen in this verse. An ignorant cannot do any perceptive, discerning good, knowing that it is the right thing to do; hence it must definitely be the good fortune of the recipient.

“An act of benevolence with happiness from an ignorant is not of thought
 It is merely the merits of the recipient’s penance and of his fortune sort”


இன்றெனது குறள்:

சிற்றறிவோர் வள்ளன்மைக் கேதுவென்று ஒன்றில்லை
பெற்றோர் தவத்துப் பயன்                (ஏது - காரணம்)

chiRRaRivOr vaLLanmaik kEthvenRu onRillai
peRROr thavaththup payan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...