ஆகஸ்ட் 12, 2014

குறளின் குரல் - 845

12th Aug 2014

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
                        (குறள் 839: பேதைமை அதிகாரம்)

பெரிது இனிது - மிகவும் இனிமையானது
பேதையார் - அறிவில்லாதவர்
கேண்மை - நட்பு
பிரிவின்கண்  - அவர்கள் நட்பில் நீங்கும்போது
பீழை தருவது - துன்பம் தருவது
ஒன்று இல் - வேறெதுவும் இல்லை.

அறிவில்லாதவர்களின் நட்பு கூட இனிமையானதுதான். ஏனெனில் அது பிரிந்து செல்லும்போது நாம் வருந்த நேராது, தேவையுமில்லை. எளிமையான கருத்து. சில நேரங்களில் சில நட்புகள் தவிர்க்க முடியாதவை. பேதையர் நட்பும் அவ்வாறானதே. அது பல நேரங்களில் இக்கட்டுகளை உருவாக்கும். எப்படி முறித்துக்கொள்வது என்ற எண்ணமும் தோன்றுவது இயற்கை. அது தாமாகவே முறியும் போது, அதைவிட மகிழ்வைத் தருவது எதுவுமில்லை. அதன்காரணமாகவே பேதையர் நட்பு பெரிதும் இனிமையானது எனப்படுகிறது. அது தானாக முறியும் இயல்பினது என்றும் உணர்த்தப்படுகிறது.

Transliteration:

Peridhinidhu pEdhaiyAr kENmai pirivinkaN
pIzai tharuvadhon Ril

Peridh(u) inidhu – it is truly sweet
pEdhaiyAr – fool’s
kENmai - friendship
pirivinkaN – if they break the friendship
pIzai tharuvadh(u) – that which brings trouble or suffering
onR(u) il – there is none.

Sometimes, even fool’s friendship is sweet and a blessing, because when it breaks, none will have to suffer or be troubled. The thought expressed is very simple. Sometimes such friendships are unavoidable. Such friendships will most likely create trouble. It is also natural for the thought, as to how to break such friendship, to cross the mind. When it breaks on its own, there will be a sense of relief and infact immense joy too. For that reason alone, that friendship is said to be sweet and joyous. Also it is implied that such friends will break, sooner or later.

“Fools friendship is considered excessively sweet,
 Because when it breaks, no hardfeelings in heart”


இன்றெனது குறள்(கள்):

அறிவிலார் நட்பினிமை மிக்காம் பிரிவில்
சிறிதும் வருந்தநே ராது

aRivilAr naTpinimai mikkAm pirivil
siRidhum varundhanE rAdhu

பிரிவில் வருந்தநேரா பேதையர் நட்பே
பெரிதும் இனிமையா கும்

pirivil varundhanErA pEdhaiyar naTpE
peridhum inimaiyA gum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...