11th Aug 2014
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
(குறள் 838: பேதைமை அதிகாரம்)
மையல் ஒருவன் - பித்து
பிடித்தவன் ஒருவன்
களித்தற்றால் - போதை
கொள்ள கள்ளைக் குடித்தாற்போல்
பேதைதன் - அறிவீனன் தன்னுடைய
கையொன்று - கையிலே
உடைமை பெறின் - பொருளைப்
பெறின்
அறிவீனன் கையிலே ஒரு
பொருளை தம்முடைய உடமையாகப் பெறுவது என்பது பித்து பிடித்தவன் ஒருவன் போதை தரும் கள்ளைக்
குடித்தாற் போலாகும். பித்து பிடித்தவன் இவ்வாறுதான்
செய்வான் என்று கணிப்பதே கடினம். அதோடு கள்ளின் போதையும் சேருமானால், கேட்கவே வேண்டாம்.
உறுதியாக அழிவு, இழிவும் தரும் செயல்களாகத்தான் அவை முடியும்.
Transliteration:
Maiyal oruvan kaLiththaRRAl pEdhaithan
kaiyonRu uDaimai peRin
Maiyal oruvan – it is like, already a mad person
kaLiththaRRAl – that also consumes liquor
pEdhaithan – when a fool
kaiyonRu – in his hand
uDaimai peRin – get wealth
A fool getting hold
of wealth is like an already mad person, getting further intoxicated with
toddy. As such the likely havoc with a mad person is disastrous; in addition if
he is intoxicated, it is certainty that it will bring even more shameful
disaster. Though the verse does it say it so, it is what we have to infer.
“Wealth, a fool gets hold of, is a sure recipe
for disaster
- like
a mad man, getting intoxicated and that too fatser”
இன்றெனது குறள்:
பேதையோன் பெற்றபொருள் பித்து பிடித்தவன்
போதைக்குக் கள்குடித்தாற் போல்
pEdaiyOn peRRaporuL piththu piDiththavan
pOdhaikkuk kaLkuDiththAR pOl
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam