ஜூன் 11, 2014

குறளின் குரல் - 783

11th Jun 2014

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
                        (குறள் 777: படைச்செருக்கு அதிகாரம்)

சுழலும் - இவ்வுலகைச் சுற்றி நின்று நிலைத்திருக்கும்
இசைவேண்டி - புகழை விரும்பி
வேண்டா உயிரார் - தம்முயிரையும் வேண்டாத வீரர்
கழல் - காலில் வீரக் கழல், வெற்றித் தண்டை
யாப்புக் - அணிதல்
காரிகை - அழகு (சேர்க்கும்)
நீர்த்து - சிறப்பாகும்

இக்குறள் வீரர்கள் அணியும் வெற்றித்தண்டையானது அவர்களுக்கு எவ்வாறு சிறப்பான அணியாகிறது என்பதைச் சொல்லும் குறள். நிலைத்திருக்கும் புகழை வேண்டி, தம்முயிரையும் துச்சமாகக் கருதும் வீரப்பெருமக்கள் காலில் அணியும் வீரக்கழலானது அவ்வீரத்துக்கு அழகு சேர்க்கும் சிறப்பாகும்.

Transliteration:

Suzhalum isaivENDi vENDA uyirAr
kazhalyAppuk kArikai nIrththu

Suzhalum – Lasting and widespread
isaivENDi  fame and renown desiring
vENDA uyirAr – such valiant warriors, will even forsake their lives.
kazhal – the leg-anklet
yAppuk – adorning, wearing that (leg-anklet)
kArikai – brings beauty
nIrththu -  is indicative of the glory of their valor

This verse speaks of the anklet that warriors wear on their leg, indicative of the glory of their valor. Adoring such anket adds beauty to their glory of the warriors of great valor that would even forsake their lives for the sake of sustained and widespread fame and renown.

“The ornament of leg-anket adds to the beauty of glorious men of valor
That would forsake even life, desiring of widespread renown of honor”

இன்றெனது குறள்:

நின்றபுகழ் வேண்டியுயிர் வேண்டாத வீரர்க்கே
பொன்றாச் சிறப்பாம் கழல்

ninRapugazh vENDiyuyir vENDAda vIrarkkE

ponRAch chirappAm kazhal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...