ஜூன் 10, 2014

குறளின் குரல் - 782

10th Jun 2014

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
                        (குறள் 776: படைச்செருக்கு அதிகாரம்)

விழுப்புண் படாத - தம்முடம்பில் முகத்திலும், மார்பிலும் பகைவரது வாள், வேல், வில்லாட் புண்ணாகாத
நாள் எல்லாம் - நாட்களை எல்லாம்
வழுக்கினுள் வைக்கும் - வீணாய் கழிந்த நாட்களாய் வைப்பர்
தன் நாளை எடுத்து - தாம் வாழ்ந்த நாட்களைக் கணக்கெடுக்கும் வீரப்பெருமக்கள்

தான் வாழும் நாட்களைக் கணக்கெடுக்கும் வீரர்கள், தாம் போர்களத்தில் பகையொடு பொருது, அவரது வில், வேல், வாட்படைகளால், முகத்திலும், உடம்பிலும் வீரப்புண்களை பெறாத நாட்களையெல்லாம், வீணாய் கழிந்த நாட்களாய் எண்ணி வருந்துவர், என்கிறது இக்குறள்.

பேராசிரியர் கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் படைத்த வரலாற்று நாவலாம் பொன்னியின் செல்வனில் பெரிய பழுவேட்டரையர் இருபத்து நான்கு யுத்தகளங்களில் பங்கெடுத்து அறுபத்து நான்கு விழுப்புண்கள் பெற்ற வீரராகவும், ஒட்டக்கூத்தர் எழுதிய மூவருலாவில், விஜயாலயச் சோழர் தொண்ணுற்றாறு விழுப்புண்களைத் தாங்கியவராகவும் குறிப்பிடப்படுகின்றனர். இலக்கியங்களில் விழுப்புண் பெருமையப் பாடிய புலவர்கள் பலர்.ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சியின் வாகையப்பற்றிய பாடிய புறநானூற்றுப்பாடலில்  (93), அருஞ்சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே!” என்பார்.

இசை விழுப்புண்ணாற்றும் மருந்தானதை மலைப்படுகடாம் இவ்வாறு சொல்கிறது:

“கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பில்
நெடுவசி விழுப்புண் தணிமார்க் காப்பென
அறல்வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல்’ -  மலைபடுகடாம்-302-304.

Transliteration:
vizhuppuN paDAdanAL ellAm vazhukkinuL
vaikkumthan nALai eduththu

vizhuppuN paDAda – when there are no wounds of war on face or chest
nAL ellAm – such days are
vazhukkinuL vaikkum – to be counted as wasted days of life
than nALai eduththu – for the valiant warriors who takes stock of their living days.

The valiant warriors that recount their days, would consider the days that their body was not pierced and wouned on their chests and the faces, by enemies arrows, spears swords, as wasted. For such warriors being in the front of the war facing enemies would any day be a worthwhile pursuit, especially with such warwounds that convey their valor.

Prof. Kalki. Krishnamurthi’s immortal magnum-opus of a novel Ponniyin selvan talks about a valiant warrior-personality, Periya Pazhuvettariar, one of the most power warrion clan from PazhuvUr as a person with sixty such wounds participating in twenty four wars.  OttakkUththar’smooVar ulA” (history of cholas of 3 generations) talks about the great VijayAlaya Chola as a warrior with ninety-six such war wounds.

Auvayyar, the poetess has sung a feudal king valiant AdiyamAn neDumAn anji about his valor and warwound in a puRanAnUru poem. Many such references to “vizhuppuN” (war wounds) in literature. Another work “malaippaDu kADA,” talks about music being the medicine for such war wounds.
“Wasted are the days without warwounds for valiant
 warriors as they count the days they were exultant”

இன்றெனது குறள்:

வீணாய் கழிந்தநாளாய் மெய்விழுப்புண் கொள்ளாத

வாணாளை வீரரெண்ணு வர்

vINai kazhindanALAi meiyvizhuppuN koLLAda
vANALai vIrareNNu var

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...