20th May 2014
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
(குறள் 755: பொருள்செயல் வகை அதிகாரம்)
அருளொடும் - அரசு
குடிகளின் நலன் கருதும் கருணையோடு பணியாற்றுதலாலும்
அன்பொடும் - குடிகள்
அரசின் மீது அன்பு கொண்டு நாட்டின் நலத்துக்காக உழைத்தும்
வாராப் - ஈட்டாத
பொருளாக்கம் - பொருட்செல்வம்
புல்லார் - பகையைப்
போன்று (எண்ணி)
புரள விடல் - அதைக்
கொள்ளாது விலக்கிவிட வேண்டும்.
முறையற்ற
வழியில் வரும் செல்வத்தை பகையெனக் கருதி கொள்ளாது விலக்கிவிடவேண்டும் என்கிறது இக்குறள்.
முறையற்ற வழியென்பது என்ன? அரசு குடிகளின் நலன் கருதும் கருணையோடு பணியாற்றவேண்டும்.
குடிகளும் அக்கருணைக்கு இயைந்து நாட்டின் நலன் கருதி பொருளீட்ட உழைக்கவேண்டும். அவ்வாறு
ஈட்டி வராத பொருட்செல்வத்தை பகைப் போல எண்ணி தள்ளிவிட வேண்டும்.
பரிமேலழகர்
உரை “புல்லார் புரள விடல்” என்பதை “அரசர் பொருந்தாது கழிய விடுக” என்று கூறுகிறது.
இது குழப்பும் உரையாக உள்ளது. இதற்கு முதற் காரணம் வள்ளுவரின் குறளே! “புல்லார்போல் தள்ளி” என்றிருந்தால் தெளிவாகியிருக்கும்.
மோனைக்காகப் “புல்லார்” என்றும், “புரள” என்றும் எழுதியதுபோல் உள்ளது. புல்லார் என்பதை பகைவர் என்றே அகராதிகள் கூறுகின்றன.
கவிதை
நயத்துக்காக முதல் வரியோடு பொருந்திய சொற்றொடராக இல்லாவிட்டாலும், இரண்டாம்
வரியை கீழ்கண்டவாறு பொருள் செய்வதே பொருத்தமாக உள்ளது.”அருளும் அன்பும் இணைந்து ஈட்டப்படாத
செல்வத்தை பகையாக எண்ணி, கொள்ளாது தவற விடவேண்டும்” என்பதே சரியான பொருளாகும்.
வள்ளுவரைத்தவிர
வேறு கவிஞர்களின் கவிதையை இவ்வாறே தமிழுலகம் உமிழாது ஏற்றிருக்குமா என்பது ஐயம்தான்.
Transliteration:
aruLODum anboDum vArAp
poruLAkkam
pullAr puraLa viDal
aruLODum – the
rule that works with compassion for the betterment of its people
anboDum –
citizens that work with love for the prosperity of state (as reciprocation)
vArAp –
when it does not come with the above (what?)
poruLAkkam – the
wealth made
pullAr – as
enemies (considering as such)
puraLa viDal – be
rid of it without touching.
The wealth that is
not earned with virtue and love must be treated as enemy and not be touched.
The virtue mentioned here according to parimelazhagar is the compassion by the
rule to work hard for the betterment of its citizens. Likewise he says, “love”
is that of citizens for their rule and the nation so that they work to make
wealth for the same. When wealth is not made inappropriate ways.
ParimElazhagar’s
commentary interpretes the phrase, “pullAr puraLa viDal” as “the king
shall not have the wealth that does not come with virtue and love”. This seems
completely construed meaning and does not make sense at all. The primary reason
for this is perhaps the way vaLLuvar has constructed the verse. Though the
words “pullAr” and “puraLa” alliterate well, they don’t fit as a
sentence, unless we accept it as the poetic license given to vaLLuvar. Renowned
Tamil dictionaries give the meaning of “pullAr” as enemies. So, it makes
sense to interpret that the wealth that is not earned with the combination of
compassion and love is not worth having and must be discarded as enemies.
It is highly
doubtful if this as a poem would have been accepted if had come from other
poets.
“The
wealth that does not come with good virtue and love
Shall
only be treated as an enemy and is only fit to shove”
இன்றெனது குறள்:
நெறிபிறழ்ந்து நெஞ்சிலன்பு இன்றிவரும் செல்வம்
செறிவில் பகையாய் விலக்கு
(செறிவு இல் - முறையான நன்னெறிகளுக்கு உட்பட்டு இல்லாததாய்)
neRipiRazhndu
nenjilanbu inRivarum selvam
seRivil
pagaiyAi vilakku
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam