மே 19, 2014

குறளின் குரல் - 760

19th May 2014

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
                        (குறள் 754: பொருள்செயல் வகை  அதிகாரம்)

அறன் ஈனும் - ஒருவர்க்கு அறத்தினாள் விளையும் நல்லவற்றைத் தரும்
இன்பமும் ஈனும் - அவருள்ளம் மகிழ்ந்திருக்க இன்பத்தையும் தரும்
திறனறிந்து - பொருளை ஈட்டும் நல்ல வழிகளை அறிந்து
தீதின்றி - தமக்கும், பிறர்க்கும் தீமை செய்யாத, இல்லாது
வந்த பொருள் - ஈட்டிய பொருள்.

ஒருவர் பொருள் தேடும் நல்ல வழிகளை அறிந்து, தமக்கும் பிறருக்கும் தீமை செய்யாத வகையிலே தேடிய பொருள் அவருக்கு அறத்தினால் விளையும் நன்மைகளையும், அதன் காரணமாக மகிழ்ச்சி தரும் இன்பத்தையும் தரும். பொருள் செய்வகை எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைச் சொல்லுகிற குறள். குற்றமற்ற வழிகளிலே தேடி, குறைவிலா மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கவேண்டும்.

கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப் பதிப்பு காட்டும் சில இலக்கிய எடுத்துக்காட்டுக்கள் இங்கே!

“அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன் திறத்து வழிபப்டூஉம் செய்கை போல்” என்கிறது மணிமேகலைப் பாடலொன்று.

நாலடியார் பாடலொன்று, “அறம் பொருள் இன்பம்” என்னும் வரிசை முறையை வைத்து, “வடுவிலா வையத்து மன்னிய மூன்றில்  நடுவணதெய்த  இருதலையும் எய்தும்” என்று சொல்கிறது. அதாவது குற்றமில்லாது இவ்வுலகத்தே போற்றப்படும் மூன்றாகிய அறம், பொருள், இன்பமாகிய மூன்றில்  நடுவண் இருக்கும் பொருள் எய்த முன்னும் பின்னுமுள்ள அறமும், இன்பமும் வந்து சேரும்.

சீவக சிந்தாமணிப் பாடல் இதே கருத்தை இன்னும் உறுதிபட இவ்வாறு கூறுகிறது: “ ஐயமில்லை இன்பம் அறனோடவையும் ஆக்கும் பொய்யில் பொருளே பொருள் - மற்றல்ல பிற பொருளே”.

Transliteration:

aRanInum inbamum Inum thiRanaRindhu
thIdhinRi vandha poruL
aRanInum – Will bestow the bleesings of virtues
inbamum Inum – will also bring delight
thiRan aRindhu – knowing the proper ways of earning the wealth
thIdhinRi - blemishlessly
vandha poruL – earned wealth

Wealth earned in blemishless ways, shall bless good virtues and delight , says this verse perhaps the proper ways of making wealth. Wealth must be earned through ways that are blameless to give limitless happiness.

Ki.vA.Ja’s research complilation work cites a few examples from other literary sources of ManimEkalai, Cheevaga ChinthAmani and nAlaDiyAr.

A nAlaDiyAr verse, citing the sequence in which virtue, wealth and happiness are typically listed, says the center objective of “poruL” (wealth), when earned in proper ways, will yield the other two in front and back of that as byproducts – an interesting way of saying the thought, conveying the universally accepted  sequence also.

Cheevaga ChinthAmaNi says, without doubt, that which yields virtue and delight is the only true wealth and others are not.

“Wealth earned by blemishless means shall
 bring virtue and delight for one and all”

இன்றெனது குறள்:

நல்வழியால் ஈட்டிய நற்பொருள் நல்குமறம்
நல்கும் நலிவிலின் பம்

nalvazhiyAl ITTiya naRporuL nalgumaRam

nalgum nalivilin bam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...