ஏப்ரல் 27, 2014

குறளின் குரல் - 738

27th Apr 2014

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு.
                (குறள் 732: நாடு அதிகாரம்)

பெரும் பொருளால் - மிகுந்த செல்வ வளம் பெற்றிருப்பதால்
பெட்டக்கதாகி - எல்லோராலும் (அயல் நாட்டினராலும்) விரும்பத்தக்கதாகி (பெட்டல் - விரும்புதல்)
அருங் கேட்டால் - கேடு என்பதே மிகவும் அரிதாகி (அதாவது இல்லாமல்) இருப்பதால்
ஆற்ற விளைவது - குறைவில்லா விவசாயத்தினால் விளைபொருள் செழிப்பும் மிக்கதே
நாடு - ஒரு நாடு எனப்படும் (ஒரு நல்ல நாடு என மதிக்கப்படும்)

நல்ல நாடு என மதிக்கப்பெறும் நாடொன்று மிகுந்த செல்வ வளம் பெற்று, அதனால் பிறநாட்டு மக்களும் புலம் பெயர்ந்து குடியமற வருவதற்கு விழையும் நாடாகவும், கேடு என்பதே அரிதாகி, இல்லாமல் ஒழிந்து, விவசாயத்தால் கிடைக்கும் விளச்சலில் சிறந்ததாகவும் இருப்பதேயாம்.

கடந்த குறளையே வேறுவிதமாகச் சொல்லும் குறள் இது. அங்கே மிகுந்த செல்வமுடையவர்கள் இருக்கவேண்டும் என்றார், இங்கே நாடே செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார்.  “அருங் கேட்டால்” என்பது நாட்டின் ஒட்டுமொத்த கேடு இல்லாமையைக் குறிப்பதாகும். கடந்த குறளில் சொல்லப்பட்ட “தக்கார்”  என்ற சொல் நலமிக்க நல்லோரையும், மேன்மையானவர்களையும் குறிக்கும்.அத்தகையவர்கள் இருப்பதால்தான் நாட்டில் கேடின்மை இருக்கும்.  “ஆற்ற விளைவது” என்று இக்குறளில் சொல்வதையே சென்ற குறளில் “தள்ளா விளையுளும்” என்றார். இக்குறளில் வெளிப்படையாகச் சொல்வது, எல்லோரும் விழையும் அளவுக்கு, அதாவது பெட்டலுக்கு தக்கதாய் ஒரு நாடு இருப்பதை. இதையும் குறிப்பாலேயே சென்ற குறளில் உணர்த்திவிட்டார். ஆக இரண்டு குறள்களும் ஒரேவிதமான கருத்துக்களைச் சொல்லவே பின்னப்பட்டுள்ளன.

Transliteration:

perumporuLAl peTTakka dhAgi arungkETTAl
ARRa viLaivadhu nADu

Perum poruLAl – because of being wealthy
peTTakkadhAgi – even for citizens of other countries to desire
arung kETTAl – destruction due to lack of discipline almost nil
ARRa viLaivadhu – yielding extremely good food crops
nADu – such a place is called a country or a state

A land is known as a sovereign state when it is very wealthy that people from other states desire to be there, when the calamitous happenings are far and few, and the crops are bountiful always – says this verse.

This verse is saying the same content of previous verse with different words if we closely look at it. The last verse said we need wealthy people for a state to be called so; this verse talks about a state being wealthy, which is indirectly due to the richness of people of the country. Likewise, without respectable people, referred to as “thakkAr” in previous verse, the calamitous happenings in a country cannot be averted. The calamitous happenings referred to here are not natural ones, but because of the character of the people of the state. Regarding bountiful crops again he has mentioned in both verses.  People desiring the state are referred in this verse more explicitly than the previous verse, where it was just hinted. 

Hence both verses seem to say the same with weaving of different words.

“Being wealthy and desirable due to that, devoid of any calamity
 blessed with bountiful of crops always, is a state of  prosperity”

இன்றெனது குறள்:

செல்வமிக்கு மாற்றாரும் ஆசையுற கேடகன்று
நல்விளைவும் கொண்டது நாடு

selvamikku mARRArum AsaiyuRa kEDaganRu

nalviLaivum koNDadhu nADu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...