19th Apr 2014
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
(குறள் 724: அவை அஞ்சாமை அதிகாரம்)
கற்றார்முன் - கற்றறிந்தோர் அவையிலே
கற்ற - தாம் கற்றறிந்ததை
செலச் சொல்லித் - அவர்கள் உள்ளம் பதியுமாறு சொல்லி
தாம் கற்ற - தாம் கற்றவற்றினும்
மிக்காருள் - மேலும் கற்று அறிவு மிக்கோரிடம் உள்ள
மிக்க - மற்ற அறிவுச் செல்வங்களையும் அவரை அணைந்து
கொளல் - அறிந்து கொள்ள வேண்டும்
முன்பே சொல்லபட்ட கருத்தான, கற்றோர்முன் அவர்கள் உள்ளத்தில் பதியுமாறு சொல்ல வேண்டுவதை சொல்லி பின்பு அக்கற்றோர்களுள், தாம் கற்றவற்றிலும் மேலாகக் கற்று சிறந்தவரிடம் மிக்கு இருப்பதையும் கற்று அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
இது எங்கனம் அவை அஞ்சாமையில் பொருந்தும் என்ற கேள்வி எழலாம். துணிவுடன் கற்றோர் அவையில் சொல்வதற்கு, கற்றோராயினும், அவை அஞ்சாமை வேண்டும். அதேபோல் தம்மிலும் மிக்காரை அணுகி அவரிடம் இருக்கும் மிகுதியான அறிவுக் கருவூலங்களையும் அறிந்து கொள்ளவும் அவை அஞ்சாமை தேவை என்பதைச் சொல்லுவதே இக்குறள்.
Transliteration:
kaRRArmun kaRRa selachchollith thAmkaRRa
mikkAruL mikka koLal
kaRRArmun – in the assembly of learned scholars
kaRRa – what one has learned
sela chchollith – must be said in a way other scholars can comprehend;
thAm kaRRa – Compared to what one has learned
mikkAruL – those who are more learned and scholarly,
mikka – what they know more than self
koLal – must be learned from them.
This verse says, what has been said already (most likely to reinforce) a couple of verses earlier, that while speaking before an assembly of scholars, one must speak in way to reach their minds without doubt; in this verse he further adds, if among the scholars assembled, a few who are more knowledgeable are identified, one must make an attempt to acquire that excess knowledge.
It may cross our minds that, what is in this verse after all about being fearless about the assembly? Firstly, to speak before a learned assembly enormous amount of courage is needed. Likewise to approach a more learned persons, also one must muster more courage – implies this verse.
“A learned must speak effectively in an assembly of high erudition
Also must learn from scholars better than him without hesitation”
இன்றெனது குறள்:
கற்றதை கற்றோர் கொளச்சொல்லி மிக்காரைப்
பற்றியவர் கற்றதும் கொள்
kaRRadhai kaRROr koLachcholli mikkAraip
paRRiyavar kaRRadhum koL
மிக்காருள் மிக்க கொளல்.
(குறள் 724: அவை அஞ்சாமை அதிகாரம்)
கற்ற - தாம் கற்றறிந்ததை
செலச் சொல்லித் - அவர்கள் உள்ளம் பதியுமாறு சொல்லி
தாம் கற்ற - தாம் கற்றவற்றினும்
மிக்காருள் - மேலும் கற்று அறிவு மிக்கோரிடம் உள்ள
மிக்க - மற்ற அறிவுச் செல்வங்களையும் அவரை அணைந்து
கொளல் - அறிந்து கொள்ள வேண்டும்
Transliteration:
mikkAruL mikka koLal
kaRRa – what one has learned
sela chchollith – must be said in a way other scholars can comprehend;
thAm kaRRa – Compared to what one has learned
mikkAruL – those who are more learned and scholarly,
mikka – what they know more than self
koLal – must be learned from them.
Also must learn from scholars better than him without hesitation”
பற்றியவர் கற்றதும் கொள்
paRRiyavar kaRRadhum koL
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam