73: (Fearlessness of an Assembly - அவை அஞ்சாமை)
[While addressing or speaking before an august assembly of
wise-men, apart from being aware of the nature and the composition of an the
assembly one must be brave and not be fearful to express himself, when required.
Though it is said as the last chapter on the section on “Ministers”, the
chapter is definitely and generally applicable to anyone that speaks before an
assembly of people. ]
16th Apr 2014
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
(குறள் 721: அவை அஞ்சாமை அதிகாரம்)
வகையறிந்து - இது
சான்றோர்கள் நிறைந்த அவை, அல்லது மூடர்களின் அவை என்றறிந்து
வல்லவை - வல்லோர்கள் நிறைந்த அவையில்
வாய்சோரார் - சொல்லில்
குற்றங்களைந்து பேசுவர்
சொல்லின் - சொற்கள் இன்ன வகையின என்று
தொகையறிந்த - அவற்றின்
தொகுப்பு, நிறை பொருள் இவற்றை நன்கறிந்த
தூய்மையவர் - தூய்மையாளர்
சொற்கள்
இன்ன வகையின என்று அவற்றின் தொகுப்பு, நிறைபொருள் இவற்றை நன்கறிந்து சொல்லும் தூய்மையாளர், தாம் சொல்லும் அவையின் தரமறிந்து,
அது சான்றோர்கள் நிறைந்த அவையா, அல்லது மூடர் கூடமா என்று அறிந்து, சென்று தாம் பேசும்
சொற்களின் குற்றங்களைக் நீக்கி பேசுவர். இதில் அவை அஞ்சாமைக்கென்ன இருக்கிறது? குற்றங்களை
நீக்கிப் பேசினாலும் அவற்றை அறிஞர் அவையிலேயே பேசினாலும், தமக்கு சரியென்று தோன்றுவதை
தயங்காமல் கூறுவதற்கு அஞ்சா நெஞ்சமும், தம்மில் நம்பிக்கையும் ஒருவருக்குத் தேவை.
இக்குறள்
வழியாக அவை அஞ்சாமையோடு தேவையான அவையறிதல், சொற்தூய்மை இவற்றையும் வலியுறுத்துகிறார்.
அவையறியா அஞ்சாமை ஆபத்திலே சேர்த்துவிடும்.
Transliteration:
vagaiyaRindhu vallavai
vAisOrAr sollin
thogaiyaRindha thUymai yavar
vagaiyaRindhu –
knowing the type of assembly a person speaks (erudite or lack of it)
vallavai – in
the assembly of scholarly
vAisOrAr –
speak blemishlessly
sollin – of
the words
thogaiyaRindha –
with an understanding of their nature, what they will convey etc,.
thUymaiyavar – the
puritans
Puritans
that do whatever they undertake with a sense of proportion and righteousness,
with the knowledge of classification of words, what they convey etc,. will
speak blemishly, knowing which assembly they address and choosing only the
assembly of scholarly. How does it
relate to being unfearful in an assembly? Though speak blemishlessly, that too
in the assembly of scholars, to speak with conviction a person must have
self-confidence, conviction and a fearless heart.
Knowing
the right assembly to speak, and speaking blemishfree words are insisted as
part of fearlessness in this first verse itself to underline that devoid of
both, would be indicative of impending danger.
“Puritans aware of which words
convey what substance will speak blemishlessly
knowing the nature and selecting the scholarly
assembly to speak accordingly”
இன்றெனது
குறள்:
சொல்வகை தேர்ந்ததூயோர் சொல்வர் அவையறிந்து
வல்லவைக்கண் குற்றங் களைந்து
solvagai
thErndhuthUyOr solvar avaiyaRindhu
vallavaikkaN
kuRRang kaLaindhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam