ஏப்ரல் 14, 2014

குறளின் குரல் - 725

14th Apr 2014

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசெலச் சொல்லு வார்.
                        (குறள் 719: அவையறிதல் அதிகாரம்)

புல் அவையுள் - புல்லறிவாளராம், அறிவிலா கீழோர்கள் நிறைந்தஅவையில்
பொச்சாந்தும் - மறந்தும், (சோர்ந்தும்)
சொல்லற்க - எதுவும் பேசவேண்டாம்
நல் அவையுள்  - நல்லறிஞர் நிறைந்த அவையில்
நன்கு செலச் - தாம் பேசுவது நன்றெனக் கொள்ளப்படுமாறு
சொல்லுவார் - சொல்லுகின்றவர் (பேசுபவர்)

நல்லறிஞர் நிறைந்த அவைதனில் தாம் பேசுவது நன்றெனக் கொள்ளப்படுகின்ற வகையில் நல்லவற்றையே பேசவல்ல ஒருவர், புல்லறிவாளராம் அறிவிலா கீழோர்கள் நிறைந்த அவையில் மறந்தும்கூட பேசக்கூடாது.  “மறந்தும்கூட” என்று சொல்லியமையால், மூடரவையை விலக்கவேண்டிய உறுதியை வலியுறுத்துகிறார் வள்ளுவர்.

கல்லாத மூடரிடம் பேசக்கூடாததைப் பழமொழிப் பாடலொன்று, “ கல்லாதவரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்கு” என்கிறது.  நாலடியார் பாடலொன்றும், “கைஞானம் கொண்டொழுகும் காரறிவாளர்முன் சொல்ஞானம் சோர விடல்” என்கிறது. கைஞானம் என்பது சிறுமை காட்டும் அறிவு என்பதாகும்.

Transliteration:

pullavaiyuL pochchAndhum sollaRka nallavaiyuL
nanguselach sollu vAr.

pull avaiyuL – in the assembly of fools
pochchAndhum – even forgetfully
sollaRka – shall not speak (who)
nall avaiyuL – in the scholarly assembly
nangu selach – one who is accepted to speak good and well
solluvAr – and speaks so.

A person that is accepted to be speaking only good that too well enough to be accepted before the assembly of scholarly, shall not speak even forgetfully before the assembly of fools, says this verse. The key phrase “even forgetfully” is included in this to emphasize the need to avoid the assembly of fools.

A poem for pazhamozhi nAnURu says there is none more harmful that speaking to uneducated fools. nAlaDiyAr says, it is not worthwhile to cheapen a persons words of wisdom before the people of lowly knowledge filled with darkness by total lack of scholarship of any kind.

A person that speaks good and acceptably to the assembly of scholarly
Shall not speak to the assembly of fools of low senses even forgetfully”


இன்றெனது குறள்:

அறிஞர் அவைவிரும்பப் பேசுபவர் சோர்ந்தும்
அறிவிலார்முன் பேசாமை நன்று

aRinjar avaivirumbap pEsubavar sorndhum
aRiviArmun pEsAmai nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...