3rd Apr 2014
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
(குறள் 708: குறிப்பறிதல்அதிகாரம்)
முகம்நோக்கி நிற்க - அவர்தம்
முகம் பார்த்து நின்றால் (எவர்? - ஒருவர் அகத்துணர்வார்)
அமையும் - அதுவே நன்றென அமையும்
அகம்நோக்கி - ஒருவரின்
உள்ளத்தை ஊடுருவி நோக்கி
உற்றது உணர்வார்ப் - அதில்
உள்ளதை உணர்ந்து கொள்வாரை
பெறின் - ஒருவர்
துணையாகப் பெற்றால்
மீண்டும் முகமே குறிப்பறியும்
கருவி என்பதைச் சொல்லும் குறள். முகத்தின் குறிப்பைக் கண்டு அகத்துள்ளதை அறிந்து கொள்வானைத்
துணையாகப் பெற்ற ஒருவர், அன்னார்தம் முகத்தை நோக்கி நின்றாலே ஒருவர்க்குப் போதுமானது.
யார் யார் முகத்தைப் பார்க்கவேண்டும் என்பது படிக்கும் போது தெளிவாகதவகையில், குழப்பமாக எழுதப்பட்ட
குறள். குறிப்பால் உணரும் அமைச்சனை
(நாம் தருவித்துக் கொள்ளவேண்டிய பொருள்) தனக்குத் துணையாகக் கொள்வதைக் கூறி, முகமே
அது காட்டும் கருவியென்று மீண்டும் சொல்லுகிற குறள். இந்த குறள் சொல்லவரும் புதிய கருத்து ஒன்றுமில்லை.
Transliteration:
mugamnOkki niRka amaiyum agamnOkki
uRRa dhuNarvArp peRin
mugamnOkki niRka – By looking at their face (who – minister
that can read mind )
amaiyum – that will be good (for who? – king!)
agamnOkki – when somebody can look into others mind
uRRadhu uNarvArp – and understand what is in there
peRin – and have them as their companion.
Once again a verse
that says, face is the indicator of what is in somebodys mind. One who has the
company of a person with the ability to read what is in other mind that would
suffice for him. Very nebulously written verse, it means that a ruler who has
the company of a minister that can read what is in the mind, it would be enough
to have him look at the face so that he would do the needful. Yet again, this
verse does not convey anything new.
“Better it’s to have the company of a mind reader
Good
to have him look at the face, for the ruler”
இன்றெனது
குறள்:
அகத்தோடல் நோக்கியறி ஆன்றோர் அவர்தம்
முகம்பார்க்க நிற்றலே நன்று
agaththODal
nOkkiyaRi AnROr avardham
mugampArkka
niRRalE nanRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam