ஏப்ரல் 02, 2014

குறளின் குரல் - 713

2nd Apr 2014

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
                        (குறள் 707: குறிப்பறிதல் அதிகாரம்)

முகத்தின் - முகத்தைவிட
முதுக்குறைந்தது - அறிவின் முதிர்ச்சி மிக்கது
உண்டோ - ஏதேனும் இருக்குமா?
உவப்பினும் - உள்ளம் மகிழ்வுறினும்
காயினும் - வாடியிருந்தாலும்
தான் முந்துறும் - அதைத் தானே வெளிக்காட்டுமே!

முகம் என்பதே குறிப்பறியும் கருவியென்பதை வலியுறுத்தும் மற்றொரு பாடல். ஒருவரின் உள்ள உவகையையும், அல்லது வாடியிருப்பதையும், முகத்தைவிட முதிர்ச்சியோடு காட்டவல்லது வேறெது என்று கேட்கிறது இக்குறள்.

முதுக்குறைவு என்பதை அறிவின் முதிர்ச்சி அல்லது பேறறிவு என்று அகராதி கூறும்.  அகமும் முகமும் நெருங்கிய தொடர்புள்ளவை. ஒற்றுத் தொழிலில் இருப்பவர்களுக்கே தங்கள் உள்ளத்தை ஒளிக்கக்கூடிய தேவையுண்டு. சில நேரங்களில் அவர்களாலும் உள்ளத்து ஓட்டத்திற்கேற்ப முகம் மாறுதலை தவிர்க்கமுடியாது.


Transliteration:

Mugaththin mudhukkuRaindhadhu uNDO uvappinum
kAyinum thAnmun dhuRum

Mugaththin – anything other face
mudhukkuRaindhadhu – more experienced with wisdom
uNDO – is there?
Uvappinum – whether the mind is happy
kAyinum – or dejected
thAn mundhuRum – it showss without hiding it

This verse establishes that the face is an indicator of what runs in side anyone and hence is an instrument for anyone to read somebody’s mind. Is there anything better other than face to show both elation and dejection of heart and mind with wisdom gained through great experience? – asks, this verse.

The word “mudhukkuRaiu” means the wisdom gained through experience. Face, heart and mind are all interconnected to each other. Face becomes the external emotive frontage to what the mind thinks or the heart feels. People engaged in espionage have the need to hide their mind and heart from others. Even for them, in many situations, it would become difficult to conceal what their face would show of what they have inside.

“Is there anything better than a face that shows experience?
 Elation or dejection, it does not hide, shows their existence”

இன்றெனது குறள்:

அகத்துவப்பும் வாடலும் காட்டும் முதிர்வில்
முகத்தினை முந்துவது யாது?

Akaththuvappum vADalum kATTum mudhirvil
Mugaththinai munduvadhu yAdhu?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...