31st Mar 2014
குறிப்பிற் குறிப்புணரா ராயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
(குறள் 705: குறிப்பறிதல்அதிகாரம்)
குறிப்பிற் - ஒருவரது
முகக்குறிப்பால்
குறிப்புணரார் - அவர்
அகத்தில் உள்ளதை அறியமாட்டார்
ஆயின் - ஆக இருக்கும் ஒருவருக்கு
உறுப்பினுள் - அவர்க்கு
இருக்கும் உறுப்புகளில்
என்ன பயத்தவோ - என்ன
பயனைக் கொண்டவைக்
கண் - கண்கள்/
கண்படைத்த ஒருவருக்கு
மற்றொருவரைக் கண்ட கணமே அவரது உள்ளத்தை ஊடுருவும் திறன் இல்லாவிட்டால், அவர் படைத்த
கண்களுக்கு என்ன பயனிருக்கும். சென்ற குறளும், இக்குறளும் குறிப்புணரா அமைச்சர்களை
இடித்துரைப்பவையாக உள்ளன. பழமொழி நானூற்றுப் பாடலொன்று, “கணையிலும் கூரியவாம் கண்”
என்கிறது!
Transliteration:
kuRippiR kuRippuNarA rAyin uRuppinuL
enna payaththavO kaN?
kuRippiR – by just looking at someone’s face
kuRippuNarAr – not knowing what is in their mind
Ayin – for such person (who can not read a face)
uRuppinuL- among his bodily faculties
enna payaththavO – what use is it to have
kaN? – the eyes?
What use is to have
eyes that cannot assess and understand what is deep inside a persons mind, by
what his face shows? – asks this verse,
More than anyone, this verse is also appropriate to ministers of a state, who
have to be guarded with anyone and everyone. The questioning format is to ask
people that lack such sharp eyes. Like a sharp arrow must be a minister’s eye
in gauging that deal wit the state is implied.
“What use is to have eyes that cannot gauge
what is
deep
inside by looking at the face of a person, as is!”
இன்றெனது
குறள்:
முகக்குறிப்பால் மாற்றார் அகமறியார் தங்கண்
முகத்திருந்து ஏது பயன்?
mugakkuRippAl mARRAr agamaRiyAr thankaN
mugaththirundu Edu payan?