8th Jan 2014
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
(குறள் 623: இடுக்கண் அழியாமை அதிகாரம்)
இடும்பைக்கு - துன்பத்துக்கே
இடும்பை படுப்பர் - துன்பத்தினைத் தருவர்
இடும்பைக்கு - துன்பம் வந்தபோது
இடும்பை படாஅதவர் - அத்துன்பம் கண்டு (நெஞ்சுரத்தினால்)
துன்பப்படாதவர்
கம்பராமாயணத்தில்
கையடைப்படலத்தில், விசுவாமத்திரர் இராமனைத் தன் வேள்விக்குத்
துணையாக தன்னுடன் அனுப்ப வேண்ட, தயரதன், அது மனதிற்கொப்பாமல், இராமன் பாலகன் என்றும்
தாமே வந்து உதவுவதாகவும் கூறும் போது, “இடையூற்றிற் கிடையூறாய் யான்காப்பென்” என்று
கூறுவான்.
இரண்டு
எதிர்மறைகளைச் சொல்லி, ஒன்றின் உச்சத்தை நிறுத்துவது கவித்துவ வெளிப்பாடு. அதையே வள்ளுவர்
இங்கு செய்கிறார். தமக்குத் துன்பம் வந்தபோது நிலை குலையாத நெஞ்சுரம் கொண்டு அதைத்
தாங்குகின்றவர், தனக்கு வந்த துன்பத்துக்கே, தம்மால் இவரை ஒன்றும் செய்ய முடியவில்லையே
என்னும் துன்பத்தைத் தருகின்றவர். முதலில் சொல்லப்பட்ட “இடும்பைக்கு” என்ற சொல், அதைச்
செய்பவருக்கே ஆகிவந்தது. ஓசை நயத்துக்காகவே சொல்லப்பட்ட குறள். உண்யாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், சொல்லப்பட்ட ஒசை நயமே இடும்பையைப் போக்குகி
நெஞ்சுரத்தைத் தருகிறதல்லவா?
Transliteration:
iDumbaikku iDumbai
paDuppar iDumbaikku
iDumbai paDAa davar
iDumbaikku – whatever that causes
hardship and misery
iDumbai paDuppar – they will create
hardhship to that which causes that
iDumbaikku- those that at the
face of hardship/misery
iDumbai paDAadavar – don’t show they are
affected by that hardship/misery
In the epic Ramayana, sage Vishwaamithra, comes to Dasaratha’s court asking
for his son to be sent with to protect a cosecrated fire austerities
Vishwamitra is doing. Dasaratha, unwilling to send his untested son, tells the
sage that he would come instead being an obstacle to his obstacles. So
expresses Kambar.
To say two negatives to emphasize a positive thought is poetic way of
expressing. vaLLuvar does the same in this verse, by using the word “iDumbai”.
Apart from sounding rich to recite, the verse says people of resolute mind will
not be aghast by the miseries caused by hardship. Their stance will be a misery
to that which creates it, a person or a situation. Whether true or not, misery
goes away reading such upliftingly rhyming poetry
“Nothing but grief
it will be for hardship
When it fails
to aghast a resolute ship “
இன்றெனது குறள்:
துன்படைந்தும் தம்துன்பில் துன்படையார் துன்புக்கே
துன்புதரும் திண்னெஞ் சினர்.
thunbaDaindu thamthunbil tunbaDaiyAr thunbukkE
thunbutharum thiNNenj chinar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam