டிசம்பர் 21, 2013

குறளின் குரல் - 613

22nd Dec 2013

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.    
                            (குறள் 606: மடியின்மை அதிகாரம்)

படி உடையார்  - மண்ணாளும் மன்னர்தம்
பற்று அமைந்தக் கண்ணும்  - செல்வமே தாமே வந்தபோதும்
மடியுடையார் - சோம்பித் திரிபவர்
மாண்பயன் - அதன்கொண்டு வரும் பெருமைக்குரிய, பேரின்பப் பயனையும்
எய்தல்  - அடைதல்
அரிது - கடினம்

சோம்பி இருப்போருக்கு, மண்ணை ஆளுகின்றவர்களுடைய பெரும் செல்வமே கிடைத்தாலும், அவர்கள் அதனால் எய்தக்கூடிய பேரின்பத்தை எய்துவது கடினம் என்கிறார் வள்ளுவர் இக்குறளில். இதனால் செல்வம் உடைத்தாராயினும், சோம்பலற்றவர்க்கே அச்செல்வத்தைக் காத்துக்கொள்ளும் திறமை இருக்கும் என்று உணர்த்துகின்றார் வள்ளுவர். இதையே ஔவையும் கொன்றை வேந்தனில், ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு” என்று சொல்லுகிறார், மடிமை ஆக்கத்திற்கு கேடு என்று சொல்லாமல்!

Transliteration:

paDiudaiyAr paRRamaindak kaNNum maDiyuDaiyAr
maNpayan eidhal aridhu

paDi udaiyAr – The great rulers
paRR(u) amaindak kaNNum – all wealth came to the person on its own
maDiyuDaiyAr – those who are lazy
maNpayan – the pleasure brought by such wealth
eidhal – to get
aridhu – is difficult.

For those who are lethargic, even if they get all the wealth of a ruler, to attain great pleasure is diifcult – says vaLLuvar in this verse. Lethargic persons lack the ability to safeguard, preserve, and grow their wealth. Such wealth will diminish and eventually wither away. Instead of saying the negative effect of slothfulness as detrimental to wealth, AuvvayyAr in her work – “konRai vEndan” says “Having zeal is what is befitting for wealth”

“Though gainful fortune of wealthy ruler falls on lap
 Slothful, have no pleasure as they know not to tap”


இன்றெனது குறள்:

மண்ணாள்வோர் செல்வமே வந்துற்றும் எப்பயனும்
எண்ணல் அரிதுசோம்பு வார்க்கு

maNNALvOr selvamE vanduRRum eppayanum
eNNal aridhusOmbu vArkku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...