டிசம்பர் 20, 2013

குறளின் குரல் - 612

 21st Dec 2013

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.       
                            (குறள் 605: மடியின்மை அதிகாரம்)

நெடுநீர் - தாமதமாக செயல்களை நீட்டித்து செய்தல்
மறவி - மறத்தல்
மடி - சோம்பல்
துயில் - ஓயாத்தூக்கம்
நான்கும் - ஆகிய நான்கும்
கெடுநீரார் - கெடுபவர்கள்
காமக் கலன் - விழையும் தோணியாம்.
செய்ய வேண்டிய செயல்களைத் தாமதாகவும், எவ்வளவு நீட்டிக்கமுடியுமோ அவ்வளவுக்கு நீட்டிச் செய்வதும், உரிய நேரத்தில் செய்யாமல் மறப்பதுவும், சோம்பி இருப்பதுவும், எப்போதும் உறங்கிக் கிடப்பதுவுமாகிய நான்கு விரும்பத்தகாத குணக்கேடுகளை, கெட்டழிய உறுதி கொண்டோரே, உவக்கத்தக்க, உல்லாசப்படகென எண்ணி, அவற்றை விழைவர், என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.

இவ்வதிகாரத்தின் மையக்கருத்து சோம்பலின்மையாக இருப்பினும், சோம்பலோடு, ஒட்டி வருகின்ற மற்ற குணக்கேடுகளையும் சொல்லி, அவற்றை விழைபவர்கள் கெட்டழிவர் என்று உறுதியோடு கூறுகிறார் வள்ளுவர். நான்மணிக்கடிகையும் மடிமை கெடுவார்கண் நிற்கும்என்கிறது.

Transliteration:

neDunIr maRavi maDithuyil nAngum
keDunIrAr kAmak kalan 

neDunIr - procrastinating
maRavi - forgetting
maDi – being sluggish
thuyil – sleeping incessantly
nAngum – these four undesirable traits
keDunIrAr – are there in those that destined for ruin
kAmak kalan – as their pleasure (actually it is other way around) boat

Procrastinating to do what needs done, forgetting to do something at the righ time, being lethargic, and always in sleep are the four bad traits for somebody who is heading towards personal ruin, destruction, and also thinks of being so as if being in a pleasure boat.

Though the chapter centers around avoid being lethargic, it lists the other bad traits that are typically seen together in lethargic people. It categorically denounces such traits by saying that people with those traits think that they are in a pleasure boat, but are heading towards the ruinous end.

“The undesirable four traits of procrastination, forgetfulness, lethargy
And prolonged sleepiness, are the ruinous pleasure boat for lechery”


இன்றெனது குறள்:

கேடுறுவார் வேண்டுகின்ற தோணிநான்கும் தாமதம்
நீடுதுயில் சோம்பல்சோர் வாம்     (சோர்வு - உறக்கம்)

kEDuRuvAr vENDuginRa thONinAngum thAmadam
nIDuthuyil sOmbalsOr vAm

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...