நவம்பர் 30, 2013

குறளின் குரல் - 592

1st Dec 2013

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
                            (குறள் 585: ஒற்றாடல் அதிகாரம்)

கடாஅ உருவொடு - யாரும் எளிதில் கண்டுகொள்ளுதற்கு அரிய உருவினனாகி
கண்ணஞ்சாது - தன்னைக் எதிரிகள் கண்டுகொண்டவிடத்தும் அஞ்சா நெஞ்சுரம் கொண்டவனாகி
யாண்டும் - எப்போதும், (பகைவர் கையில் கொடுமையும், துன்புறுதலும் கொள்ளும் போதும்)
உகாஅமை - உள்ளத்துள்ளதை வெளிச்சொல்லாத உறுதியும் கொண்டவனாகி
வல்லதே - ஆகிய வலிமைகளை ஒட்டுமொத்தமாக உள்ளடகியவரே
ஒற்று - சிறந்த ஒற்றராவர்.

இக்குறள் ஒற்றுத்தொழில் புரிவோருக்கான இலக்கணத்தை வகுக்கிறது. ஒற்றுத்தொழில் புரிவோர் அவரை யாரும் எளிதில் இனம் கண்டுகொள்ளாத மாற்று உருவும் (உரையாசிரியர்கள் பலரும் அத்தகு மாறுவேடங்கள் பார்ப்பார், வாணிகர், அறவோர், துறவோர், வரியர் என்பர்), அவ்வாறு இருக்கையில் உளவு செய்தவிடத்து அறிவாற்றல் மிக்கோர் உண்மை உருவை அறிந்துகொள்வாராயின் அஞ்சாமையும், சிறைசெய்து துன்புறுத்தினாலும், உள்ளத்தொளித்த உண்மைகளை வெளிப்படுத்தாமையுமாகிய குணங்களை கொண்டவராக இருத்தல் வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

கம்பர் இராமாயணத்தில் இராவணனின் ஒற்றர்கள் வேவுபார்க்க வானரவடிவினராகி வந்த செய்தியை, “இற்றது காலமாக இலங்கை வேந்தன் ஏவ ஒற்றர் வந்தளவு நோக்கிக் குரங்கென உழல்கின்றாரை” என்பார்.  மேலும் யுத்த காண்டத்தின் அணிவகுப்பு படலத்தில், சார்த்தூலன் என்னும் ஒற்றன், இராவணனைக் காணவரும் காட்சியிலே தன்னை வாயிற்காப்போனிடம் அறிவித்துக்கொள்வதாக ஒருபாடல், ஒற்றருக்கு இருக்கவேண்டிய ஒளிக்கும் குணம்ப் பற்றி, இவ்வாறு கூறுகிறார்.

“தாயினும் பழகினார்க்கும் தன் நிலை தெரிக்கல் ஆகா
மாய வல் உருவத்தான் முன் வருதலும், வாயில காப்பான்,
சேயவர் சேனை நண்ணி, செய் திறம் தெரித்தி நீ என்று
ஏயவன் எய்தினான்' என்று அரசனை இறைஞ்சிச் சொன்னான்”

தன்னை, தாயினும் நெருக்கமானவர்க்கும் தன்னை வெளிப்படுத்திக்கொளாத சிறந்த ஒற்றனாகச் சார்த்தூலன் வருணித்துக்கொள்ளுகிறான்.

Transliteration:

kaDAa uruvoDu kaNNanjAdu yANDum
ugAamai valladE oRRu

kaDAa uruvoDu – In a disguise that others can not spot
kaNNanjAdu – when disguise discovered by opponents, without showing fear in eyes
yANDum - always
ugAamai – never let out the secrets even under most oppressive situations
valladE – people of such caliber and capability
oRRu – are known to be qualified spies

This verse defines the how the spies should be. They must be inconsipicuous, disguise themselves so that opponents don’t recognize and identify them at all. Most commentators says such disguises would be that of a Brahmin, saints, sages, poor, business people etc,.  If discovered by opponents, they should not be fearful and spit out the secrets, even if under the most hostile conditions and they are tortured to speak out. Such capabale, hardened and resolute can only be true spies.

In Kamba rAmAyaNam, kamban says that rAvaNA’s spies disguised as monkeys of sugreeva to infilter opponents army to find out about their strength (“iRRadu kAlamAga ilangai vEndan Eva oRRar vandaLavu nOkki kurangena uzhalginRArai”). In another verse, a spy SarththUlan announces himself to the guard of rAvaNA as someone who does not reveal his identity even to those who are dearer to him his own mother. “tAyinum pazhaginArkkum than nilai therikkal AgA mAya val uruvaththAn”.

“Inconspicuous in guise, unfearful if discovered, strong and resolute
 To guard secrets even with the most hostile enemy are spies of grit”


இன்றெனது குறள்:

ஐயுராத் தோற்றமும் ஐயுறுவார்க் கண்டஞ்சா
மையுமுள் ளத்தொளிப்பும் ஒற்று

aiyuRath thORRamum ayuRuvArk kaNDanjA
maiyumuL LaththoLippum oRRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...