23rd Nov 2013
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
(குறள் 577: கண்ணோட்டம் அதிகாரம்)
கண்ணோட்டம் - குடிகளிடம் அருள் நோக்கோடு
இல்லவர் - இல்லாதவர்கள்
கண்ணிலர் - விழிகள் இருந்தாலும் இல்லாதவரே
கண்ணுடையார் - பார்வை உடையவர்கள் என்பவர்கள்
கண்ணோட்டம் - அருள் நோக்குடன்
இன்மையும் - இல்லாமையும்
இல் - இல்லை..
இவ்வதிகாரத்தில்
ஆள்வோர்க்கு அருள்நோக்கு தேவை என்பதை சொல்வதற்காக மீண்டும் கண்களை வைத்தே அதிகார நிரப்பியாக
ஒரு குறள்! கண்ணோட்டம் இல்லாதவர்க்கு கண்கள் இருந்தாலும், கண்கள் அல்லாதவராகவேக் கருதப்படுவார்
என்றும், கண்கள் படைத்ததன் பயனை அறிந்தவர்க்கு அருள் நோக்கு இல்லாமலும் இருப்பது இல்லை
என்றும் வள்ளுவர் கூறுகிறார்.
கண்கள் படைத்ததன் பயன் காணும் காட்சிகளை நுகர்வதற்காக மட்டுமில்லை,
கனிவான நோக்கினால் குடிகளைக் காப்பதும்தான் என்பதை மீண்டும் மீண்டும் வலிந்து வலியுறுத்துவதற்காகக்
சொல்லப்பட்டதாகக் கொள்ளலாம். நல்லதை மீண்டும் மீண்டும் சொல்வது நல்லதுதானே!
Translieration:
kaNNOTTam illavar kaNNilar kaNNuDaiyAr
kaNNOTTam inmaiyum il
kaNNOTTam – Compassionate and kindly look
illavar – rulers that lack it
kaNNilar – are considered blind (though may have eyes)
kaNNuDaiyAr – those that are considered to have eyes
kaNNOTTam – compassionate, kindly look
inmaiyum – devoid of that
il – will never be.
Once again a
chapter-filler verse to emphasize that rulers need compassionate and kindly
look towards citizens. Rulers that don’t have benign look, are considered to be
without eyes, though may have functioning eyes. Those that have eyes will not
ever be without kindliness towards citizens.
Though seems to be
repeating himself to emphasize a good, vaLLuvar has probably employed the
technique of saying the certain things in many ways.
“Men with unkindly looks are not considerd to
have eyes
Those
with eyes that see will never be unkindly likewise”
இன்றெனது குறள்:
அருள்நோக்கு அல்லார் விழிகளற்றார் அஃது
இருப்பார்க்குப் பார்வையின்மை இல்
aruLnOkku allAr vizhigaLaRRAr ahdu
iruppArkkup pArvaiyinmai il
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam