20th Nov 2013
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(குறள் 574: கண்ணோட்டம் அதிகாரம்)
உளபோல் முகத்து - முகத்தில் கண்கள் இருப்பது போல் இருந்தாலும்
எவன் செய்யும் - அவற்றால் என்ன பயன்?
அளவினால் - அவரவர்க்கு தக்க அளவுக்கு
கண்ணோட்டம் இல்லாத - கனிவோடு கூடிய அருட்பார்வை
இல்லாமலிருக்கின்ற
கண் - கண்களால்?
இன்னார்க்கு
இன்ன அளவில் செய்யவேண்டுமென்று நேரமும், தகுதியும் அறிந்து அவரவர்க்கு ஏற்ற அளவில்
கனிவோடு கூடிய அருட்பார்வை கொள்ளாதவர்க்கு முகத்திலே கண்கள் இருந்து என்ன பயன்? கண்களைக்
கொண்டு செய்த குறள்களில் இதுவும் ஒன்று. “கண்ணுடையோர்
என்போர் கற்றோர், முகத்திரண்டு புண் உடையார் கல்லாதவர்” என்ற குறளை ஏற்கனவே
படித்திருக்கிறோம். கல்லாதவரோடு, இப்போது கனிவான பார்வையில்லாதவரும் கண்ணில்லாதவர்
ஆகிறார். கல்லாத மூடருக்குக் கனிவு என்பதைப்பற்றி என்ன தெரியும்? யாரிடத்தில் எவ்வளவுக்கு
கனிவு வேண்டும் என்றும் எவ்வாறு தெரியும்?
Transliteration:
uLapOl
mugaththevan seyyum aLavinAl
kaNNOTTam
illAda kaN
uLapOl
mugaththu – though eyes appear to be in the face
evan
seyyum – what use are they?
aLavinAl – to the
right extent (based on situation or befitting the person)
kaNNOTTam
illAda – that which not having compassionate look
kaN – eye
(devoid of compassion)
A ruler must know the extent to which any of his subjects be
shown merciful eye based on situation or person’s need. If they do not know that, what use is it for
them to have eyes? There is another verse that has already used “eyes” in an
earlier chapter to say that only learned are seen to be having eyes and fools
instead are seen to have only two sores in the place of eyes. “kaNNuDaiyOr
enbOr kaRROr mugaththiraNDu puN uDaiyAr kallAdavar” is the earlier seen
verse. Along with uneducated, now compassionless persons (especially rulers) also
are said to have no eyes. After all isn’t it true that fools will have no idea
of what compassion is and who must shown how much?
“What good
is it to have eyes in the face
When have no measured kindness’s trace”
இன்றெனது குறள்:
அருள்நோக் களவறிந்து கொள்ளார்க்குக் கண்கள்
இருந்து முகத்துசெய்வ தேது?
aruLnOk kaLavaRindu koLLArkkuk kaNgaL
irundu mugaththuseiva dEdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam