18th Nov 2013
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
(குறள் 573: கண்ணோட்டம் அதிகாரம்)
பண் என்னாம் - இசைக்க
இராகம் என்ற பெயரில் சுரச்சேர்க்கை இருந்தால் என்ன பயன்?
பாடற்கு இயைபின்றேல் - அது பாடுதற்கு ஏற்றவாறு முறையும் ஒழுங்குமாக இல்லையானால்?
கண் என்னாம் - அதேபோல கண்ணிருந்தும் என்ன பயன்?
கண்ணோட்டம் இல்லாத - அது அருள் நோக்கில்லாத
கண் - கண்ணாக இருந்தால் (ஆளுவோருக்கு)
கேட்பதற்கு
இனிய இசையைத் தாரத முறை சேரா சுரச் சேர்க்கையினால் என்னபயன்?
அதைப்போல் கனிவோடு கூடிய அருள் நோக்கு இல்லாதவர்க்கு அவர்கொண்ட கண்களால் என்ன
பயன் இருக்கமுடியும்? வள்ளுவர் உலக வாழ்வியல் கூறுகள் பலவற்றையும் உற்று நோக்கிய பார்வையாளனாக
மட்டுமல்ல, அவற்றிலே தோய்ந்து பலகலைகளையும் கசடற கற்ற பேரறிவாளராக இருந்திருக்கவேண்டும்.
இக்குறளில்
“இராகம்” என்று இன்னாளில் வழங்கிவருகிற “பண்”
என்பதற்கு முறையான சுரச்சேர்க்கை வேண்டுமென்கிற நுட்பமான செய்தியைச் சொல்லி, இசையிலே
தன் நுண்ணறிவையும் வெளிப்படுத்துகிறார். சுரங்கள்
அளவையில் பன்னிரண்டு, இருபத்திரண்டு என்று பல வேறு ஆய்வாளர்களின் கருத்துபடி இருந்தாலும்,
ஏழு சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற
சுரங்கள் (இவை தமிழிசையில், முறையே குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்
எனப்படும்) முறையாக சேரவில்லையானால், இசையென்ற நிலை மாறி ஓசையென்றாகி விடும்.
இதையே
எடுத்துக்காட்டாகச் சொல்லி அருட்பார்வையில்லாத கண்ணினைக் கொண்ட ஆள்வோனின் ஆட்சியென்பது
ஓசையைப் போன்று ஒழுங்குமுறையற்றது என்பதை நுணுக்கமாகக் கூறுகிறார்.
Transliteration:
paNennAm pADaRku
iyaibinREl kaNennAm
kaNNOTTam illAda kaN
paNennAm – What use is it to
have a tune (so called)?
pADaRku iyaibinREl – if that melody is
made up of discordant notes
kaNennAm – What use is to have
eyes (for the ruler)?
kaNNOTTam illAda – if there is no
mercifuly or compassionate
kaN – eyes (for the
ruler)?
What use is it to
construct a socalled melody (cacophony) with discordant notes? Similarly, what
use is to have eyes that are not compassionate? This is especially true for
rulers that have to care for subjects.
This verse shows that vaLLuvar not only observed keenly the worldy ways
and prescribed code of conduct for the mankind but, must have been so well
versed in many disciplines of knowledge, including highly elevated art form of
music.
What is known as “raagam”
in the world of music today, has been known as “PANN” in Tamil culture
and literature for over 2000 years, which is not an arbitrary arrangement of
notes to produce discordant melody; if the notes arrangement are discordant, it
is not suitable for listening as a melody and would be called noise of
cacophony.
Citing this
example, vaLLuvar says, for a ruler without compassionate eyes for his
subjects, his rule is cachophonic just like music made out of discordant notes.
“What use is it to arrange discordant notes
and make music of cacophony?
What
use is to have eyes that are unkindly and give a rule of disharmony?
இன்றெனது குறள்(கள்):
பாடற் கிசையா இசைபோல் அருட்பார்வை
கூடலின்றிப் பார்க்கின்ற கண்
pADaR kisaiyA isaipOl aruTpArvai
kUDalinRip pAkkinRa kaN
பாடற் கிசையாத பண்பயனென் நோக்கிலருள்
கூடலற்ற கண்பயன் என்?
pADaR kisaiyAda paNpayanen nOkkilaruL
kUDaRRa kaNpayan en?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam