நவம்பர் 10, 2013

குறளின் குரல் - 571

10th Nov 2013

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
                         (குறள் 564: வெருவந்த செய்யாமை அதிகாரம்)

இறை கடியன் - எம்மை ஆளுவோன் கொடியவன்
என்றுரைக்கும் - என்று குடிமக்கள் தூற்றுகின்ற
இன்னாச்சொல் - கடுஞ்சொற்களுக்கு ஆளாகின்ற
வேந்தன் - அரசன்
உறை கடுகி - அவனிடம் உறைந்திருக்கும் ஆக்கமும், ஆயுளும் குறைந்து
ஒல்லைக் - விரைந்து
கெடும் - அழியும்

குடிமக்கள் அஞ்சும்படியான கொடுங்கோல் வேந்தனை இவன் கொடியன் என்று நெஞ்சம் நொந்து குடிமக்கள் தூற்றுவர். அவ்வாறு தூற்றப்படுகின்ற வேந்தனின் ஆக்கமும், ஆயும் குறைந்து அவனும் விரைவில் அழிந்துவிடுவான் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. மீண்டுமொரு அரைத்தமாவையே அரைக்கின்ற குறள் என்று சொல்வதைத்தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒன்றுமில்லாத குறள்.

Transliteration:
iRaikAdiyan enRuraikkum innAchchol vEndhan
uRaikaDugi ollaik keDum.

iRai kAdiyan – my ruler is despotic (he is so fearfully tyrannic)
enRuraikkum – when subjects curse, illspeak of their ruler as such (that their ruler is despotic)
innAchchol – because of those harsh words of frustrated citizens
vEndhan – such a ruler
uRai kaDugi – all his possessions of wealth and life will reduce in size and time
ollaik – will very soon
keDum - perish

A tyrant feared and cursed by his subjects with their hearts filled with disgust and hate will lose all his wealth, possessions including his country and will also lose life very soon – says this verse. Yet another repetitive verse with nothing earth shaking said new.

“A tyrant, his subjects fear and curse unsavory
 Will lose all his wealth and even life of chivalry


இன்றெனது குறள்:

கொடியன் எனகுடி தூற்றுவேந்தன் ஆக்கம்
கடிதிழந்து ஆயுளுமா யும்

koDiyan enakuDi thURRuvEndan Akkam
kaDidizhandu AyuLumA yum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...