நவம்பர் 09, 2013

குறளின் குரல் - 570

9th Nov 2013

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
                         (குறள் 563: வெருவந்த செய்யாமை அதிகாரம்)

வெருவந்த - எல்லோரும் அஞ்சும்படியான (அசுரரைப்போல்)
செய்தொழுகும்  - ஆட்சி செய்யும்
வெங்கோலனாயின் - கொடுங்கோல் ஆட்சியாளனாயின்
ஒருவந்தம் - உறுதியாக
ஒல்லைக் - விரைந்து
கெடும் - ஆட்சியில் நிலைத்திருக்காமல் கெடுவான்

இக்குறள் கூறுவதும் “உள்ளங்கை நெல்லிக்கனி”; எல்லோர் உள்ளமும் விழைவதுதான்; சரித்திரப் பக்கங்கள் காட்டும் உண்மைதான். இக்குறளின் சொல்லாடலில், ஒருவந்தம் என்னும் சொல், உறுதிப்பாட்டினை, நிலைத்தன்மையைக் குறிக்கும் சொல், அதை ஆட்சி நிலையாத காரணம்பற்றி கூறியமை அழகு! கருத்து இதுதான்: எல்லோரும் அஞ்சும்படியான ஆட்சியைச் செய்யும் கொடுங்கோலர் நிலைத்திருந்து ஆட்சி புரியார். அவர் விரைந்து, உறுதியாகக் நிலைத்திருக்காமல் அழிவர்.

Transliteration:
Veruvanda seydhozhugum vengkOla nAyin
Oruvandham ollaik keDum

Veruvanda – For everyone to fear his rule
seydhozhugum – rulers that rule the country
vengkOlanAyin – such tyrants
Oruvandham – will definitely
ollaik - sooner
keDum – will become unstable in his power and perish

Another verse with an obviously observable and understandable thought; Almost everybody would desire the same too; There are ample examples in the pages of history for the same too.  The word “oruvandam” denotes “certainty” and it is used to denote “uncertainty and instability” of the rulers because of his tyrannic nature. The verse says: “Rulers that rule in manners that others fear (to be under his rule, will not rule for long; they will perish in their power soon with certainty.

“Perish will the tyrant, that rules by fear of everyone
 Losing power, with certainty, very soon to be gone”


இன்றெனது குறள்:
அஞ்சிட ஆட்சிசெய்யும் வெங்கோல் விரைந்ததனால்
எஞ்சா துறுதியாய்க்கெ டும்

anjida Atchiseyyum vengkOl viraindadanAl
enjA durudiyAikke Dum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...