அக்டோபர் 31, 2013

குறளின் குரல் - 561

31st Oct 2013

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
                         (குறள் 554: கொடுங்கோன்மை அதிகாரம்)’

கூழுங் - பொருளாதாரத்தையும் (குடிமக்களின் ஈட்டுதலால் பெருகும், அருகும்)
குடியும் - நல்ல குடிமக்களையும்
ஒருங்கிழக்கும் - சேர்ந்தே இழக்கும் (குடிமக்கள் வேறு இடங்களை நோக்கிச் செல்வதால்)
கோல்கோடிச் - செங்கோல் வளைந்து
சூழாது செய்யும் - பின்விளைவுகளை ஆராயாது செய்கின்ற
அரசு - ஆட்சி

செங்கோல் வளைதலால், பின்னால் வரும் விளைவுகளை ஆராயாமல் ஆட்சி செய்கின்ற கொடுங்கோலரசு, தன் நாட்டின் வளத்துக்காதாரமான குடிமக்களையும், அவர்களால் பெருகும் பொருளாதாரத்தையும் சேர்ந்தே இழக்கும் என்பதிக்குறள் சொல்லும் கருத்து. கொடுங்கோல் ஆட்சியை நீங்கி, நல்லாட்சி நடக்கும் நாடுகளை நாடி நல்லகுடிமக்கள் சென்றுவிடுவார்கள் ஆகையால் நாட்டின் வளமும் அதனால் குன்றி அழிந்துபடும்.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை செங்கோன்மை தவறிய அரசினால் வரும் தொடர் விளவுகளை இவ்வாறு கூறுகிறது.

“கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாறிவறம் கூரும்
மாரிவறம் கூரின் மன்னுயிர் இல்லை”

இதை வேடிக்கையாகச் சொல்லுமிடத்து, கம்பன் குலோத்துங்கனிடம் கோபித்து சேரநாட்டுக்குச் சென்றதாகக் கூறுவார்கள். கம்பன் கோபித்துச் சொன்ன பாடல்:

“மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்-- என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு”

ஒரு நாட்டின் அறிவுச்செல்வம் குறைவது, அழிவதும், அந்நாட்டின் அரசு சரியில்லை என்பதையே காட்டுகிறது, “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்ற சொற்படி, வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டினாலும், தாய்நாட்டிலிருப்பதையே மக்கள் விரும்புவர். அதற்கு மாறாக, நாட்டைவிட்டு அகலுவார்களேயானால், அந்நாடு அறிவு வளத்தையும், அறவளத்தையும், மற்றும் பொருள் வளத்தையும் மெல்ல இழக்கும். இதை பாரதியின் கோபம் வேறுவிதமாகச் சொல்லியது, “பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்று.

Transliteration:

kUzhung kuDiyum orungizhakkum kOlkODich
cUzhAdhu seyyum arasu

kUzhung – Prosperity of wealth
kuDiyum – and the citizens that make the wealth of the country
orung(u) izhakkum – will lose together
kOl kODich – with the bent scepter (metaphorically, not literally)
cUzhAdhu seyyum – ruling without thinking about the consequences
arasu – such government

The rule unthinking of the consequences and with the scepter bent (metaphorically, not physically), will lose its prosperity of wealth and the citizens that make the wealth of the state together is the substance of this verse. It is to be inferred that the despotic rule will activate and accelerate the brain drain and the people of value and virtue that are the backbone of the society; hence will the country, without guidance or people that make wealth will diminish in stature, status, wealth and decimate over a period of time.

Manimekalai, one of the five epics of Tamil literature says,

“With bent scepter will affect the dispositions of planets
 With planets dispositions affected, will affect the seasons
 With seasons affected, will fail the rains and hence life on earth”

An incident in Kamban, the great poets’ life: He left the country of KulOthungA for reprimanding him unjustly, not because of arrogance and pride, but because of his confidence and ability to live anywhere with his knowledge.  The poem asks kulOnthunga, “Are you worthy of your statur as a king? Is the prosperity of this land is all because your making? Did I learn all that I know for you to patronize? Is there a land which will not accept me with open arms? Like is there a branch of a tree which will not accept a monkey?” The ending question makes it a little funny, but the meaning cautions the ruler of unjust ruler’s country.

When there is a huge brain drain in the country due to mass scale migrations to prosperous and respecting lands, it means, the rule of the country is not proper and inherently unjust. BhartiyAr said it even more angrily, “When ghosts rule the country, the ethics will eat the corpses”.

“The prosperity of wealth and the people will be lost together
 By the despotic ruler, unthinking of consequences, to wither”

இன்றெனது குறள்:

செல்வமும் மக்களும் சேர்ந்திழக்கும் செங்கோலால்

அல்லவைசெய் ஆட்சி அழிந்து

selvamum makkaLum sErndhizhakkum senkOlAl
allavaisey ATchi azhindhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...