அக்டோபர் 16, 2013

குறளின் குரல் - 546


16th Oct 2013

இகழ்ச்சியிற் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
                             (குறள் 539: பொச்சாவாமை அதிகாரம்)

Transliteration:
igazhchiyiR keTTArai uLLuga thAntam
magizhchiyin mainduRum pOzhdu

igazhchiyiR – Because of forgetfulnes
keTTArai – people that perished
uLLuga – always think about them
thAntam – because of their
magizhchiyin - happiness
mainduRum pOzhdu – when they get arrogant because of their success

In general many may become forgetful either directly or indirectly, of the past trials and tribulations, when the smell of success hits them or blinds them; that may perish them. vaLLuvar underlines that as the reality of life and emphasizes the importance of not being forgetful blind-sided by success.

“When the happiness of success blinds, a person must think
 of the people perished in the past, by their forgetfulness blink”

தமிழிலே:
இகழ்ச்சியிற் - தம்முடைய மறவென்னும் சோர்வினால்
கெட்டாரை - அழிந்தாரை
உள்ளுக - நினத்துப்பார்த்து
தாந்தம் - ஒவ்வொருவரும் தம்முடைய
மகிழ்ச்சியின் - மகிழ்ச்சியிலே
மைந்துறும் போழ்து - மதப்படையும் போது (அதனால் தளர்வுறும்போது)

பொதுவாக பலரும் தம்முடைய வலிமையோ வெற்றியோ தரும் களிப்பின் மதப்பிலே அது மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ தரும் தளர்வை, சோர்வை, மறதியை நினைக்காமல் இருக்கக்கூடும். அதனால் அழிந்துபடக் கூடும். வள்ளுவர், அத்தகையோர், மறதியினால் அழிந்த சரித்திரங்கள் கோட்டிட்டு காட்டி மறதியின்மையின் அவசியத்தை உணர்த்துகிறார் வள்ளுவர்.

இன்றெனது குறள்:

மகிழ்வின் மதப்பில் மறப்போர் நினைத்தல்
நெகிழ்ந்து அழிந்தாரை நன்று

magizhvin madappil maRappOr ninaiththal
negizhndu azhindArai nanRu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...