அக்டோபர் 15, 2013

குறளின் குரல் - 545


15th Oct 2013

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையும் இல்.
                             (குறள் 538: பொச்சாவாமை அதிகாரம்)

Translitration:
Pugazndavai pORRi seyalvENDunj seyyA
thigazhnDArk kezhumaiyum il

Pugazndavai – what wisemen have held high as values
pORRi – must adhere to them
seyalvENDunj – while living and doing deeds
seyyAdu – If not done,
igazhnDArkk(u) – and forget such values
ezhumaiyum il – there is no elevation in life or no good will come even for seven births

Those who do not adhere to and forget the values prescribed and praised as high values to hold, will never see elevated status in life or will see any good in life even for seven births. The word “ezhumai” can be interpreted to be either seven births (as done most commentators) or simply raised status in life, which makes sense in a non-controversial way.

“Those who ignore and not adhere, values, praised to, by wisemen
 Will never see any good in life, or in lives to come, even all seven”

தமிழிலே:
புகழ்ந்தவை - சான்றோர் இன்னவை உயர்ந்தவை என்று போற்றுபவையை
போற்றிச் - கருதிக் கடைபிடித்துச்
செயல்வேண்டுஞ் - செயல்கள் செய்யவேண்டும்
செய்யா(து) - அவ்வாறு செய்யாமல்
இகழ்ந்தார்க்(கு) - மறந்துபோவார்க்கு
எழுமையும் இல் - நன்மை இப்பிறப்பிலும் மட்டுமில்லாமல் ஏழுபிறப்பிலும் இல்லை; இதை உயர்ச்சி இல்லை என்றும் கொள்ளலாம்.

சான்றோர் போற்றிய உயர்ந்தவை எனப்படும் சிறந்த கொள்கைகளைக்  கடைபிடித்து ஒருவர் கடனாற்ற வேண்டும். அவ்வாறு இல்லாமல் மறந்தார்க்கு, இப்பிறப்பு மட்டுமில்லாமல், ஏழு பிறப்பிலும்  நன்மை விளையாது. எழுமை என்பது ஏழு பிறப்புகளையும், உயர்ச்சியையும் குறிக்கும் சொல். பொதுவாக உரையாசிரியர்கள் ஏழ் பிறப்பு என்றே சொன்னாலும், உயர்ச்சி என்பது எந்தவித சர்ச்சையும் இல்லாத பொருளாகும். எழுமையும் என்று "உம்" இல் முடிவதால், மற்ற நன்மைகளும் இல்லை, உயர்வும் இல்லை என்று கொள்ளலாம். அல்லது ஏழு பிறப்பும் என்றும் கொள்ளலாம்.

இன்றெனது குறள்(கள்) :

சான்றோர் புகழ்பவை செய்யா மறந்தோர்க்கு
தோன்றுநன்மை ஏழ்பிறப்பும் இல்

sAnROr pugazhbavai seyyA maRandhOrkku
thOnRunanmai EzhpiRappum il

சான்றோர் புகழ்பவை செய்யா மறந்தோர்க்கு
தோன்று முயர்வொன்றும் இல்

sAnROr pugazhbavai seyyA maRandhOrkku
thOnRu muyarvonRum il

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...