அக்டோபர் 02, 2013

குறளின் குரல் - 532



2nd Oct 2013

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
                             (குறள் 525: சுற்றந்தழால் அதிகாரம்)

Transliteration:

koDuththalum insolum ARRin aDukkiya
suRRaththAl suRRap paDum

koDuththalum – with wealth, being always a support
insolum – and a person of sweet words
ARRin – and do so
aDukkiya –  direct and indirect
suRRaththAl – by kindred
suRRappaDum – be surrounded

Once again a verse with an obvious fact that almost everyone knows either as a pleasant or bitter truth as per their persoanl experiences. It definitely feels like a count filling verse for this chapter. But the specific word usage of “aDukkiya” is rather important in this verse. This is also an observed fact, but endorses that this has been seen and experienced for thousands of years. When the wealthy and affluent or people that wield power can not only support, but be sweet in words to the direct kith and kin as well as the indirect army of kindred, then they will be surrounded by such a battalion of kindred always, though said in the pleasant context, coud be bitter sweet sometimes!

Infact, a nAlaDiyAr verse says it much more effectively, though a little expensive by two more lines.  The verse says: ‘When a person is of sweet words that do not differentiate others by branding in certain ways like, “my perception of this person is this, this person is my relative or the person is not directly ours”, and can remove the pains of poor kindred, they are the most qualified to lead”. These words throw more light into this subject and also support once again the golden words, of AuvayyAr. “selvarkkazhagu sezhunkilAi thAngudal’

“When not differentiating the people as close or distant kindred
 a person of sweet words and benevolence is always surrounded”

தமிழிலே:
கொடுத்தலும் - தன்னுடைய செல்வத்தால் தாங்குதலும்
இன்சொலும் - உற்ற இன்சொல் பேசுதலும்
ஆற்றின் - செய்வாராயின்
அடுக்கிய - தொடர்ந்துவரும் (நேரடியான மற்றும், அடுத்த அடுக்கினைச் சேர்ந்த)
சுற்றத்தால் - சுற்றங்களாலும்
சுற்றப்படும் - சூழப்படுவர்.

மீண்டும் ஒரு “குங்குமம் சிவப்பு” போன்ற எல்லோரும் அறிந்த உண்மையைக் கூறுகிற குறள். இவ்வதிகாரத்தில் குறள் எண்ணிக்கை நிறைவுக்காகச் செய்யப்பட்டது போல். ஆனாலும், இக்குறளில் சொல்லப்படும் “அடுக்கிய” என்ற சொல் முக்கியத்துவம் வாய்ந்தது.  செல்வராயிருந்து செழுங்கிளைத் தாங்கி, தம்முடைய சுற்றத்தினரிடம் இனிமையான சொற்களையே சொல்பவரைச் சுற்றியே அவரது சுற்றம் இருப்பது வெளிச்சமான உண்மை. சுற்றம் மட்டுமில்லாமல், சுற்றத்தின் சுற்றம், அதனுடைய சுற்றமென்று அடுக்குத்தொடராகச் சுற்றப்பட்டாளமே அவரைச் சூழ்ந்துவரும் என்றவோர் உண்மையை (பல நேரங்களில் கசப்பான அனுபவமாகவும் இருக்கக்கூடிய) சொல்லியிருப்பது ஒன்றே இக்குறளின் சிறப்பு.

இக்குறள் சொல்ல நினைக்கும் கருத்தை இதைவிடச் சிறப்பாக சொன்ன நாலடியார் பாடல் இதோ.

இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல்
என்னும் இலராம் இயல்பினால் - துன்னித்
தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும்
தலைமக்கள் ஆகற்பா லார்

இப்பாடலின் கருத்து: “இவர், இப்படிப்பட்டவர்; எம் உறவினர்; அயலார்' என்று வேறுபாடு குறிக்கும் சொல்லைச் சொல்லாத இயல்பினராய், வறுமைத் துன்பத்தால் வாடும் மக்களைச் சார்ந்து அவர்தம் துயரத்தைக் களைபவரே யாவர்க்கும் தலைவர் கும் தன்மையுடையவர் ஆவர்”. அடுக்கிய சுற்றத்தை அயலார் என்று நினைக்காதவரே தலைவர் என்பது நான்கு வரிகளாயினும் விளக்கும் விளக்காக இருக்கிறது. இவ்வரிகள் ஔவையின், “செல்வர்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்ற பொன்னான வாக்கினை விளக்கும் வரிகளாக உள்ளதைக் காணலாம்.

இன்றெனது குறள்:
சுற்றத்தின் சுற்றமும் சூழ்ந்துவரும் ஈவதோடு
உற்றதோர் இன்சொலாற் றின்

suRRaththin suRRamum sUzhndhuvarum IvadODu
uRRadOr insolAR Rin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...