1st Oct 2013
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
(குறள் 524: சுற்றந்தழால் அதிகாரம்)
Transliteration:
suRRathtAl suRRap paDaozhugal selvandAn
peRRaththAl peRRa payan
suRRathtAl – with the associates
suRRappaDa ozhugal – living a life, surrounded by them, their
support
selvam – is the real wealth
tAn peRRaththAl – for some one, because of greatness
peRRa payan – what that person gets.
The
word order of this verse cause considerable confusion to interpret in a
meaningful way, Parimelazhagar and hence others after him or that followed him
also have interpreted based on what they make of the word “peRRaththAl” as “peRRa
adanAl”, meaning “because of getting
that”. It is very unlikely that vaLLuvar has meant so, as he certainly was
not devoid of words to play with to get the intended meaning more effectively.
Because
of the construed word meaning, the verse has been interpretd thus: “The very purpose and use of somebody
begetting wealth is to live surrounded by the close associates”. Without
any base, this would mean that it is right to have many people live off a rich
person. It is very clear that was not the intended meaning. The word “peRRam” means “greatness”.
The
verse with the correct interpretation of
the words, directly means this: “To live
and be loved surrounded by close associates is itself wealth for someone. The
greatness attained by the person also has a meaning and purpose when such is
the case”.
Two
verses from nAlaDiyAr and aRaneRichchAram express similar thoughts. nAladiyar
verse says, just like a tree giving shade when the hot sun is burning, taking
all the heat on itself, a great human being is the one who lives for others to
live happily despite his own personal suffering. aRaneRichchAram verse says, rich must quell anger, be good, must support
all that are associated with them, must share food with them, muts be
charitable. Such good souls will live among the heavenly beings. Auvayaar has said it in one sentence, “selvark
kazhagu sezhunkiLai thAngudal” - a profound expression.
“True wealth is to live surrounded by kindred
Also the
purpose, use of greatness obtained”
தமிழிலே:
சுற்றத்தால் - தன்னைச் சூழ்ந்திருக்கும் நெருங்கிய சுற்றத்தால்
சுற்றப்பட ஒழுகல் - சூழப்பட்டு
வாழ்வதே
செல்வம் - செல்வமாம், வளப்பமாம்
தான் பெற்றத்தால் - தான் பெருமையால், (அடைந்ததால் என்பது
மற்ற உரையாசிரியர்கள் சொல்வது, பெற்றதால் என்றிருந்தால் அது சரி!)
பெற்ற பயன் - அடைந்த பயன்
இக்குறளின் சொற்கோர்ப்பு குழப்பத்தை உண்டுபண்ணுவது.குறிப்பாக
“பெற்றத்தால்” என்பதை “பெற்ற அதனால்” என்று
கொண்டு பரிமேலழகர் பொருள் செய்திருகிறார். மற்றவர்களும் அதையே பின்பற்றியிருக்கின்றனர்.
பெற்றம் என்று கொண்டால் பெருமை என்ற பொருள் வருவதால், அதை சரிவர பொருத்திப்பார்க்காமல்
பெற்றதால் என்பதை அடைந்ததால் என்று கொண்டு இக்குறளின் பொருள் எழுதப்பட்டுள்ளது. ஒருவன்
செல்வம் பெற்றதன் பயனே அவனைச் சுற்றம் சூழ்ந்திருந்து அவனோடு ஒட்டி ஒழுகுவதால்தான்
என்பதாக எழுதப்பட்டுள்ளது.
இதை, “தன்னை நெருங்கிய
சுற்றம் சூழ வாழ்ந்திருப்பதே ஒருவருக்குச் செல்வம் என்றும், அவர் அவ்வாறு உற்ற பெருமைக்கும்
அதுவே பயன்” என்றும் பொருள் செய்தால், குறளின் சொல்லொழுக்குக்குப் பொருத்தமாக இருக்கும்.
நாலடியார் பாடல் ஒன்று இவ்வாறு சொல்கிறது. படிக்கும் போதே விளங்கும்
பாடல்.
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட்
கெல்லாம்
நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப்
- பழுமரம்போல்
பல்லார் பயன்றுய்ப்பத் தான்வருந்தி
வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்.
அறநெறிச்சாரப் பாடலொன்றும்,
இதே கருத்தை எளிதாக இவ்வாறு சொல்கிறது.
செல்வத்தைப் பெற்றார்சினங்கடிந்து செவ்வியராய்ப்
பல்கிளையும் வாடாமல் பாத்துண்டு - நல்லவாம்
தானம் மறவாத தன்மையரேல் அஃதென்பார்
வானகத்து வைப்பதோர் வைப்பு
இன்றெனது குறள்:
செழுங்கிளை சூழாதான் செல்வம் பெறுதல்
பழுதன்றி வேறுபய னென்?
sezhunkiLai
sUzhAdAn selvam peRudal
pazhudanRi
vERupaya nen?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam