ஆகஸ்ட் 01, 2013

குறளின் குரல் - 470


1st Aug 2013

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை  யார்.
                          (குறள் 463: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)

Transliteration:
Akkam karudhi mudhalizhakkum seivinai
UkkAr aRivuDaiyAr

Akkam karudhi – Thinking of the possible profit
mudhalizhakkum – causing loss of investment
seivinai – such deeds that one indulges in
UkkAr – will not encourage
aRivuDaiyAr – wise people

Wisemen will never encourage someone to engage in deeds that waste all their principle investment as they would construe such an act as a pure gamble and done in haste. Looking through the pags of history, there were many kings, driven by ambitions of expanding territories, went on war with many neighboring states and lost even what they had. Though they always justified such acts as deeds to promote more prosperity, it was mainly due to avarice and misplaced ambition of personal glory. This would tatamount to gamble and wisemen would never accept or encourage such acts.

“Wisemen never encourage deeds that render the investment, a waste.
 As gamble it is to work only for a profit as the motive and done in haste”

தமிழிலே:
ஆக்கம் கருதி - எப்போதும் தனக்குக் கிடைக்கூடிய ஆதாயத்துக்காக மட்டும்
முதலிழக்கும்  - கைம்முதல் அத்துணையும் வைத்திழக்கச்
செய்வினை - செய்கின்ற தொழில் யாவையும்
ஊக்கார் - ஊக்குவிக்க மாட்டார்கள்
அறிவுடை யார் - அறிவு மிக்க சான்றோர்கள்

ஆதாயத்துக்காக மட்டும் செயல்களைச் செய்து, அவற்றிலும் உள்ள முதலையும் வைத்திழப்பதை அறிவுடைய சான்றோர் ஒரு நாளும் ஊக்குவிக்கமாட்டார்கள். இதை ஆளுபவர்களுக்காகச் சொல்லும் போது, நாட்டின் வளத்துக்காக என்ற பெயரில் மற்ற நாடுகளின் மேல் படையெடுத்து விரிவாக்கம் செய்ய முயன்று உள்ளதையும் இழந்த அரசர்களை மனதில் இருத்தியே சொல்லுகிறார்.  உள்ளதையும் வைத்திழத்தல் சூதாட்டத்துக்கு ஒப்பே என்கிற உண்மையைச் சான்றோ அறிவராதலின் அவர்கள் அத்தகைய செயல்களுக்கு ஒப்பவும் மாட்டார்கள், ஊக்கம் தரவும் மாட்டார்கள்!

இன்றெனது குறள்:
ஆதாயம் வேண்டி முதலிழக்கச் செய்தொழில்
சூதாகும், சான்றோரூக் கார்

AdhAyam vENDi mudalizhakkach seithozhil
sUdhAgum, sAnROrUk kAr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...