ஜூலை 31, 2013

குறளின் குரல் - 469


31st July 2013

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.
                          (குறள் 462: தெரிந்துசெயல்வகை அதிகாரம்)

Transliteration:
Therindha inaththoDu thErndheNNich cheivArkku
aRuLporuL yAdhonRum il

Therindha inaththoDu – With known friends who mean well
thErndheNNich – after due deliberation and planning
cheivArkku – those who engage in deeds
aRuLporuL – impossible deed
yAdhonRum – whatever it is
il - none

When after due reseach and planning, with known and talented good friends, if someone gets into doing anything, it would be impossible not to be able to do it well. Instead of taking the word, “therindha inam” as friends, we should understand that to mean, “talented, like minded people”.

The fact that vaLLuvar says it with such authority is somewhat not appropriate as he himself has been a believer of fate as seen in the canto on virtues. After all he has said in his fate chapter, “What is more powerful than fate”. So, though the general content gives confidence and the reason for choosing good talented company for doing any work, it must be kept in mind that there is an element of fate too, not to be ignored or forgotten.

“If done with well wishing friends, no deed is impossible,
 That too executed after due research and plan feasible”

தமிழிலே:
தெரிந்த இனத்தொடு - தாம் நன்கறிந்த ஆற்றலுடைய நண்பர்களோடு, நலம் விரும்பிகளோடு
தேர்ந்தெண்ணிச்  - (தேர்ந்து எண்ணிச்) ஆராய்ந்து, திட்டமிட்டு
செய்வார்க்கு - செயல்களை ஆற்றுவோர்க்கு
அரும்பொருள் - செய்யமுடியாத செயலென்று
யாதொன்றும் - எதுவொன்றுமே
இல் - இல்லை

தாம் அறிந்த ஆற்றலுடைய நல்ல நண்பர்களோடு, அதாவது தம்முடைய நலம் விரும்பிகளோடு, ஆராய்ந்து, திட்டமிட்டு செயலாற்றுவோருக்கு, செய்யமுடியாத செயலென்று , கிடைப்பதற்கு அரியதென்று ஒன்றும் கிடையாது என்பதே இக்குறள் சொல்லும் கருத்து.  தெரிந்த இனம் என்பதை நண்பர்கள் என்று கொள்வதைவிட நல்ல ஆற்றல் உடையவர்கள் என்று அறியப்பட்டவர்களோடு என்று கொள்வதே சரியாக இருக்கும்.

இக்குறளில் உறுதியாகச் சொல்லப்படுவது சற்று உறுத்துகிறது, எனெனில் வள்ளுவரே அறத்துப்பால் ஊழ் அதிகாரத்தில், “ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும்” என்றும் கேட்டிருக்கிறார்.

இன்றெனது குறள்(கள்):

நன்கறிந்த நண்பரோடு ஆராய்ந்து திட்டமிட்டார்க்
கொன்றுசெய்தல் இன்றாம் அரிது

nangaRindha naNbarODu ArAindhu dhittamiTTArk
konRuseidhal inRAm aridhu

நல்லாற்றல் மிக்கவரோ டாராய்ந்து திட்டமிட்டார்க்
கில்லை அரிதாம் செயல்

nallARRal mikkavarO DArAindhu dhittamittArk
killai aridhAm seyal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...