ஜூலை 19, 2013

குறளின் குரல் - 457


19th July 2013

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
                      (குறள் 450: பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம்)

Transliteration:
pallAr pagaikoLaliR paththaDuththa thImaiththE
nallAr thoDarkai viDal

pallAr – that of many
pagai - enmity
koLaliR – more than having
paththaDuththa – ten times
thImaiththE – worse evil
nallAr – the learned and wisemen
thoDar – the relationship
kai viDal – to be rid of

Enmity, whether it is with one or many, is not a desirable one. Even if it is one, it will spawn into many to ruin eventually.  vaLLuvar says in this verse, worse than enmity is the severing of relationship with the learned elders.

Outwardly appearing enmity, is seen and understood, it can be prevented, averted, controlled and even quelled with the wisemen’s help; but if the companionship of wisely elders is lost, inner enemies will grow in number and strength and will eventuall ruin the person. Hence it is an imperative that a ruler seeks and beholds the relationship of learned elders to guide them appropriately.

InnA nARppadhu verse 26, starts by saying, “periyArOdu yAththa thoDar viDudhal innA” (it is a misery to leave the relationship with learned elders).

Another verse from NAlaDiyAr says, “Even by giving gold, it is difficult to get close to the learned elders (because they are devoid of such kindles). When there is an opportunity to be close to such elders, people devoid of good virtues, do not realize the value and spend their life in vein”.

The chapter, which started by saying that a ruler must seek the closeness of learnerd elders, finishes by saying, severing such relationship is detrimental to anyone, particularly rulers.

More than the harm of hatered of many enemies, is dreadful
The severance of closeness to learned elders that’re useful”

தமிழிலே:
பல்லார் - பலருடைய
பகை - பகையை, விரோதத்தினை
கொளலிற் - கொள்ளுதலையும் விட
பத்தடுத்த  - பத்து மடங்கு
தீமைத்தே  - தீமையாம்
நல்லார் - நல்ல பெரியோர்களின்
தொடர் - தொடர்பினைக்
கை விடல் - கைவிடுதல்

ஒருவரின் பகை என்றாலும், பலருடைய பகை என்றாலும் பகையென்பது கொள்ளத்தக்கது அல்ல. பகை ஒன்றாயினும் பல்கிப் பரவிப் பலவாகும் இயல்புடையது. அத்தகைய பகையைவிடவும் தீமை பயப்பதாம், நல்லோரும், பெரியோருமான அறவறிவாண்மை உடையோரது தொடர்பைத் துண்டித்தல், விட்டுவிடுதல்.

பகையென்பது, புறப்பகையாகின், கண்ணுக்கும், கருத்துக்கும் புலப்படுமாகையால், அதைக் நல்லோரின் துணைகொண்டு, தவிர்க்கலாம், ஒடுக்கலாம், அறுக்கலாம். ஆனால் பெரியோரது துணையாவது இற்றுப்போகுமாயின், அகப்பகைகளும் வளர்ந்து, ஆட்கொல்லியாக மாறி அழித்துவிடும். அதனாலேயே பெரியோரின் அணுக்கமும், அறவழி நடத்துதலும் ஒருவருக்குத் தேவை.

இன்னா நாற்பது பாடல் (26), “பெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா” என்று அதை ஒரு துன்பமாகவேச் சொல்லுகிறது.

நாலடியார் பாடலொன்று, பொன்னையே கொடுத்தாலும் நெருங்குதற்கரிய பெரியோரை, யாதொரு பொருட் செலவுமின்றியே சேரத்தக்க நிலையைப் பெற்றிருந்தும், நற்பண்பு அற்ற அறிவிலார் வீணாகக் காலத்தைக் கழிக்கின்றனரே என்று அங்கலாய்க்கிறது. அப்பாடலாவது:

பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரைக்
கொன்னே தலைக்கூடப் பெற்றிருந்தும் - அன்னோ
பயனில் பொழுதாக் கழிப்பரே, நல்ல
நயமில் அறிவி னவர்

பெரியோரின் துணை கொள்ளவேண்டும் என்று சொல்லி தொடங்கிய அதிகாரம், பெரியவர்களின் தொடர்பைக் கைவிடுதலின் துன்பத்தைச் சொல்லி நிறைவு செய்கிறது.

இன்றெனது குறள்:

பெரியோர் தொடர்பறுத்தல் பன்மடங்கு தீதுபல்லோர்
எரிபகையைக் கொள்ளுத லின்

periyOr thoDarbaRuththal panmaDangu thIdhupallOr
eripagai koLLudha lin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...